சிவனும் முருகனும் ஹிந்து கடவுளா என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பி உள்ளார். சிவனும் முருகனும் இந்து கடவுள் என்று தன்னுடன் விவாதம் செய்ய தயாரா எனவும் கேள்வி எழுப்பினார். முருகன் சைவ கடவுளா அல்லது ஹிந்து கடவுளா என்று கேட்ட சீமான், முருகன் என் ரத்தம் என்றும் என் இனக் கடவுள் என்றும் திட்டவட்டமாக தெரிவித்தார்.
திடீரென தேர்தல் வரும் போது மட்டும் முருகன் மீது பாசம் வருகிறது என்றும் கோவிலுக்குள் நடக்கும் திருட்டுக்களை பற்றி சொல்லுங்கள் என்றும் கேட்டார். மலைகளை வெட்டி கல்குவாரி நடத்துவதை கேட்க முடியாதா என்று கேட்ட சீமான், திருப்பரங்குன்றத்தையும் முதலமைச்சர் ஸ்டாலின் கல்குவாரி ஆக்கிவிட்டால் அப்போது போராட வருவீர்களா என்று கேட்டார். மக்களின் எந்த பிரச்சனைகளுக்கு நின்று இருக்கிறீர்கள் என்று கூறுங்கள் என்றும் மீனவர்கள் மீன்பிடிக்க உரிமைகளை இழந்து நிற்கிறார்கள் என்றும் காவிரி நதிநீருக்கு கையேந்தி நிற்கிறோம் அதற்காக போராடினீர்களா என்றும் கேட்டார். அயோத்திகள் ராமர் அரசியல் செய்து பார்த்தீர்கள், அது எடுபடவில்லை என்றும் ஜெய் ஸ்ரீ ராம் என்று பேசுவதில்லை என்றும் கேட்டார்.

எந்த அயோத்தியில் ராமரை வைத்து அரசியல் செய்து வந்தீர்களோ அதே தொகுதியில் அகிலேஷ் யாதவ் ஒரு தாழ்த்தப்பட்டவரை நிறுத்தி உங்களை தோற்கடித்தார் என்றும் உங்கள் அரசியல் செத்துப் போய்விட்டது எனவும் தெரிவித்தார். அதனால்தான் தற்போது முருகனைத் தொட்டுக் கொண்டிருக்கிறீர்கள் என்றும் தலைகீழாக நின்று தண்ணி குடித்தாலும் சரி குன்னக்குடிக்கு அன்னக்காவடி எடுத்தாலும் சரி எதுவும் நடக்காது என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: உடுமலைப்பேட்டை சங்கர் ஆணவக்கொலை வழக்கு... அவ்ளோ அலட்சியம்..! இது தான் சமூகநீதியா என சீமான் கண்டனம்..!
தமிழகத்தில் உள்ள இஸ்லாமியர்கள் அனைவரும் தன் சொந்தம் என்றும் சீமான் தெரிவித்தார். முருகனைக் கும்பிட வேண்டாம் என யாராவது உங்களை எதிர்த்தார்களா என்று கேட்டுள்ள சீமான், எதை வைத்து அரசியல் செய்வது என தெரிய வேண்டாமா என்று கேட்டுள்ளார்.
இதையும் படிங்க: விவசாயத்தை பாழாக்கும் விதை சட்ட வரைவு... பேராபத்து..! சீமான் கடும் எச்சரிக்கை...!