நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளரான சண்முகசுந்தரத்தின் மகனும், 2026 சட்டமன்ற தேர்தலில் திருப்பூர் தெற்கு தொகுதியின் நாம் தமிழர் கட்சி வேட்பாளருமான நித்தீஷ் (எ) சரவணன் - ன் திருமணம் திருப்பூர் மாவட்டம் அவிநாசியை அடுத்து ஆட்டையம்பாளையத்தில் உள்ள செந்தூர் மஹால் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இந்த திருமண நிகழ்ச்சிக்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரான சீமான் நேரில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தி உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது, இந்தத் தேர்தலில் 234 தொகுதிகளும் தனித்துப் போட்டியிடும் ஒரே அரசியல் பேரியக்கம் நாம் தமிழர் கட்சி. உலக அரசியல் வரலாற்றில் என்னைப் போன்று தோற்றவர்கள் யாரும் கிடையாது. 2016ல் முதன்முதலாக தேர்தல் களத்தில் வந்தேன். நாலு லட்சத்து ஐம்பது ஆயிரம் வாக்குகள் பெற்று 1.1 விழுக்காடு அளவில் நின்று தோற்றேன்.
எந்த ஒரு அரசியல் கட்சி இயக்கமும் அது போன்ற தோல்வியை சந்தித்த பிறகு மீண்டும் 10 ஆண்டுகளாக தனித்து எந்த தேர்தலையும் சந்தித்திருக்க முடியாது. ஒன்று மற்ற கட்சியுடன் இணைந்து இருக்கும் அல்லது அந்த கட்சியே அரசியல் பதிவேட்டில் இருந்து காணாமல் போயிருக்கும். னால் மறுபடியும் தேர்தலில் நின்று ஐந்து விழுக்காடு பெற்றோம். மீண்டும் தேர்தலில் நின்று 7 விழுக்காடு வாக்குகள் பெற்றோம். கடந்த தேர்தலில் எட்டு புள்ளி ஐந்து சதவீதம் வாக்குகள் பெற்று தனித்து நின்று மக்களின் அங்கீகாரம் பெற்ற கட்சியாக விளங்குகிறது.
ஜாதியை கூறவில்லை, மதத்தை கூறவில்லை, சாராயம் கொடுக்கவில்லை, பணம் கொடுக்கவில்லை என எதுவும் கொடுக்காமல் எளிய மக்களை நிறுத்தி நூற்றாண்டு காலம் கண்ட கட்சிகளுக்கு மத்தியில் தனித்து வெற்றி பெற்று வருகிறோம். இம்முறை இந்திய அரசியல் வரலாற்றில் ஐந்தாவது முறையாக தனித்து நாம் தமிழர் கட்சி 2026 இல் சட்டமன்றத் தேர்தலை சந்திக்கின்றது.
இதையும் படிங்க: ஒரு நடிகரை பார்க்க போய் செத்ததற்கு ரூ.35 லட்சமா? சும்மா பேசிட்டு இருக்காதீங்க..! சீமான் காட்டம்…!
என்னுடன் பிறந்தவர்கள் என்னை பெற்றவர்கள் என் மீது அன்பு கொண்டவர்கள் கைவிட மாட்டார்கள் என்ற நம்பிக்கையில் 234 தொகுதியில் 134 தொகுதியில் இளைய தலைமுறை தேர்தல் களத்தில் அறிமுகப்படுத்தியுள்ளோம். புது ரத்தம் பாயாத உடல் புதிய நீர் பாயாத கடலும் உற்சாகம் அடையாது. அதன் காரணமாகவே இளைய தலைமுறையினருக்கு அதிகளவில் வாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளது. எனவே தமிழக மக்கள் நிச்சயம் நாம் தமிழர் கட்சியினருக்கு ஆதரவு அளிப்பார்கள் எனக்கூறினார்.
இதையும் படிங்க: சதுப்பு நிலத்தையும் விட்டு வைக்கல... ரூ. 2000 கோடி ஊழல்... விளாசிய சீமான்...!