கோவை விமான நிலையத்தில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பத்திரிகையாளர்களை சந்தித்தார், அப்போது பேசிய அவர் , Tet தொடர்பான நீதிமன்ற உத்தரவு தொடர்பான கேள்விக்கு நாட்டின் அனைத்துப் பிரச்சனைகளையும் நீதிமன்றம் தான் தீர்மானிக்கிறது. அப்படியானால் சட்டமன்றம், பாராளுமன்றம் எதற்கு? என்று கேள்வி எழுப்பினார். மக்கள் பிரதிநிதிகளுக்கு எந்தத் தேர்வும் இல்லையென்றும், ஆனால் மருத்துவம், கல்வி துறைகளில் மட்டும் தேர்வுகள் வைத்து மாணவர்களை சுமத்துகிறார்கள் என்றும் கண்டனம் தெரிவித்தார்.
பீகாரில் 65 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டிருப்பது குறித்து கருத்து தெரிவித்த அவர், காங்கிரஸ் காலத்திலும் இதே முறைகேடுகள் நடந்ததாகவும், EVM இயந்திரம் நம்பகமற்றது என்றும், ராகுல் காந்தி வாக்குச்சீட்டு முறையை மீண்டும் கொண்டு வர வேண்டும் என்றும் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர் , சாதி இன்னும் நாட்டில் நிலவி வருகிறது. குடியரசுத் தலைவரும் அதிலிருந்து விலகவில்லை என்றார். சாதி என்பது ஒரு “மனநோய்” எனவும், அதை நிச்சயம் அகற்றுவோம் என்றும் உறுதியளித்தார்.
இதையும் படிங்க: விதியை மீறி குப்பை கொட்டுறீங்க... எதிர்த்துப் போராடினா ARREST பண்றீங்க! என்னங்க நியாயம்? - சீமான்
வெளிநாட்டு நாய்களை வீடுகளில் வளர்த்ததால், நம் நாட்டு நாய்கள் தெரு நாய்களாக மாறியதாகக் கூறினார். தெருநாய்களை ஒழிப்பது தீர்வு இல்லை, அவற்றுக்கு தடுப்பூசி போட்டு பராமரிக்க வேண்டும் என்ற அவர், டிரம்ப் கூறும் கருத்துக்கள் வியப்பில்லை, அவர் ஒரு வேறு உலகத்தில் வாழ்கிறார் என விமர்சித்தார். இந்தியா பொருளாதார நெருக்கடி நிலையை சந்திக்கக்கூடும் என்றும் எச்சரித்தார்.தொடர்ந்து பேசிய அவர்பிரச்சனையை அரசு தீர்க்காமல் காலம் கடத்துவதால் தான், நாம் தமிழர் கட்சி களத்தில் போராட்டம் நடத்த வேண்டி வருகிறது என்று தெரிவித்தார்.
தவெக விஜய் மீது விமர்சனம் வைபப்து ஏன் என்ற கேள்விக்கு, நீட், கச்சத்தீவு, காவிரி பிரச்சனை உள்ளிட்ட அனைத்திற்கும் காங்கிரஸ் தான் காரணம். ஆனால் இப்போது அதை விஜய் புனிதப்படுத்துகிறாரா என விமர்சித்தார். திண்டிவனத்தில் கவுன்சிலர் செய்த சர்ச்சை காரியம் நாட்டின் அவமானம் என்று கூறினார். ஆட்சிக்கு வந்தால், இப்படிப்பட்டவர்களிடம் கல்வி சான்றிதழ் முதல் வாக்குரிமை வரை அனைத்தையும் பறித்து விடுவோம் என்றும் எச்சரித்தார்.
இதையும் படிங்க: மக்களை ஏமாத்தாதீங்க! உடனே அமல்படுத்துங்க... பசுமை தீர்ப்பாய உத்தரவை சுட்டிக்காட்டிய சீமான்