திமுக கட்சியை வாரிசு அரசியல் என்று எப்போதும் எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகிறது. தற்போது தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் பல்வேறு அரசியல் கட்சிகள் பரப்புரையை தொடங்கியுள்ளன. அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தேர்தல் பரப்புரை நடத்தி வருகிறார்.
அவர் நேற்று நடத்திய பரப்புரையில் பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் பங்கேற்றார். இந்த நிலையில் எடப்பாடி பழனிச்சாமியையும் தமிழிசை சௌந்தரராஜன் அரசியல் வருகை குறித்தும் அமைச்சர் சேகர்பாபு விமர்சனம் செய்து பேசினார்.

சென்னை எழும்பூரில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, கொரோனா பெருந்துற்று காலத்தில் குடும்பத்திற்கு நான்காயிரம் ரூபாய் கொடுத்தவர் முதலமைச்சர் ஸ்டாலின் என்று தெரிவித்தார். திமுக ஆட்சியில் தான் வடசென்னைக்கான வளர்ச்சித் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார். முந்தைய அதிமுக ஆட்சியில் மழை, வெள்ளத்தின் போது மக்களை நேரில் சந்திக்காதவர் எடப்பாடி பழனிச்சாமி என குற்றம் சாட்டினார்.
இதையும் படிங்க: கருணாநிதிக்கு காங்கிரசால் அழுத்தம்... பரப்புரையில் சீமான் பகிரங்க குற்றச்சாட்டு..!
சென்னையில் ஒரு சொட்டு மழை நீர் கூட தேங்காது என எடப்பாடி பழனிச்சாமி கூறியதாகவும் ஆனால் சென்னை தத்தளித்ததாகவும் விமர்சனம் செய்தார். தொடர்ந்து பேசிய அமைச்சர் சேகர்பாபு, நீட் தேர்வு, பெட்ரோல், டீசல் விலை தொடர்பாக மத்திய அரசுக்கு எடப்பாடி பழனிச்சாமி அழுத்தம் கொடுத்தாரா என்றும் கேள்வி எழுப்பினார். தமிழிசை காங்கிரஸ் குடும்பத்தைச் சேர்ந்தவர் என்றும் இது குடும்ப அரசியல் இல்லையா எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதையும் படிங்க: கூட்டணிக்குள் குழப்பம்..! வேட்புமனுவை திரும்பப் பெறாத காங்கிரஸ்... திருமா. கடும் கண்டனம்..!!