வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து உள்ள நிலையில் தமிழகத்தில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. கனமழை எதிரொலியாக செம்பரம்பாக்கம் ஏரி நீர்மட்டம் கிடு கிடுவென உயர்ந்தது. 24 அடி கொள்ளளவு கொண்ட ஏரியில் நீர்மட்டம் 21 அடியை எட்டியது. இதன் காரணமாக நேற்று மாலை 4 மணிக்கு செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து தண்ணீர் திறக்கப்பட்டது.
செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து நீர் திறக்கப்பட்டதை அடுத்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப் பெருந்தகை ஆய்வு செய்தார். நீர்வரத்து தொடர்பாக அதிகாரிகளிடம் ஆலோசித்தார். அப்போது தன்னிடம் கூறாமல் தண்ணீர் திறந்ததாக செல்வப் பெருந்தகை அதிகாரிகளை கடிந்து பேசினார். மக்கள் பிரதிநிதிகளிடம் கூறாமல் ஏரியை திறப்பீர்களா என காட்டமாக பேசி இருந்தார்.

அதிகாரிகளே மக்கள் பிரதிநிதிகளாக மாறுவீர்களா என்றும் அப்போது எதற்கு அரசும் அரசின் பிரதிநிதிகளும் என்றும் கேள்வி எழுப்பினார். இதனால் சலசலப்பு ஏற்பட்டது. இந்த நிலையில், செல்வப்பெருந்தகை என்று செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, அதிகாரிகளால் ஆட்சியின் நற்பெயருக்கு களங்கம் வந்துவிடக் கூடாது என்ற வேதனை இருக்கிறது செம்பரம்பாக்கம் ஏரி நீர் திறப்பு விவகாரம் குறித்து கூறினார்.
இதையும் படிங்க: தேசிய விருதா முக்கியம்? மக்கள் அங்கீகரிப்பார்கள்..! - பைசன் படத்தை பாராட்டிய முத்தரசன்
பட்டியலினத்தவர்களுக்கு உறுதுணையாக இருக்கும் ஆட்சி திமுக ஆட்சி என்றும் குறிப்பாக முதல்வர் இந்த விஷயத்தில் கண்ணும், கருத்துமாக இருக்கிறார் எனவும் தெரிவித்தார். துணை முதல்வரும் இரவும், பகல் பாராமல் வேலை செய்கிறார்., ஆனால் ஒன்றிரண்டு அதிகாரிகள் செய்யும் தவறுகளைதான் சுட்டிக்காட்டுகிறோம் என்று கூறினார்.
இதையும் படிங்க: "தாழ்த்தப்பட்டவர் என்பதால் புறக்கணிப்பு" - செல்வப் பெருந்தகைக்கு ஆதரவாக களமிறங்கிய நயினார் நாகேந்திரன்...!