கடந்த நான்கரை ஆண்டுகளில் நான்கு லட்சம் கோடி அளவுக்கு திமுக ஆட்சியில் ஊழல் நடந்திருப்பதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கூறியுள்ளார். ஒவ்வொரு துறையிலும் பல கோடி ரூபாய் ஊழல் நடந்திருப்பதாகவும் ஊழல் தொடர்பாக புத்தகமாக தயாரித்து இருப்பதாகவும் தெரிவித்தார். ஊழல் பட்டியலை தமிழக ஆளுநர் ரவியிடம் வழங்கி இருப்பதாகவும், பி டி ஆர் பழனிவேல் தியாகராஜனின் ஆடியோ தொடர்பாக குறிப்பிட்டும் பேசி இருந்தார்.
இந்த நிலையில் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப் பெருந்தகை செய்தியாளர்களிடம் பேசினார். எடப்பாடி பழனிச்சாமியின் ஊழல் புகார் தொடர்பாகவும் அதிகார பகிர்வு குறித்த நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாக்கூரின் கருத்து தொடர்பாகவும் விளக்கம் அளித்தார். அதிகார பகிர்வு குறித்து மாணிக்கம் தாக்கூர் எம்பி கூறியது அவரது தனிப்பட்ட கருத்து என்று மாநில காங்கிரஸ் தலைவர் செல்வப் பெருந்தகை தெரிவித்துள்ளார்.

கருத்துரிமை உள்ளது என்பதற்காக எல்லா கருத்துக்களையும் பொதுவெளியில் பேசக்கூடாது என்று காங்கிரஸ் சாருக்கு அறிவுறுத்தினார். திமுக தவிர வேறு எந்த கட்சியுடனும் கூட்டணி குறித்து பேசவில்லை என்றும் செல்வப் பெருந்தகை விளக்கம் அளித்தார். திமுக கூட்டணியில் எங்களுக்கு தேவையான தொகுதிகளை நாகரீகமாக கேட்டு பெறுவோம் என்றும் செல்வப் பெருந்தகை கூறியுள்ளார். தூய்மை பணியாளர்கள் கோரிக்கையை பரிசீலிக்க வேண்டும் என முதலமைச்சர் ஸ்டாலினிடம் வலியுறுத்தி இருப்பதாகவும் தெரிவித்தார்.
இதையும் படிங்க: துணைவேந்தர் நியமன மசோதாவை திருப்பி அனுப்பிய ஜனாதிபதி... தமிழக அரசுக்கு செல்வப் பெருந்தகை வலியுறுத்தல்...!
அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீதான ஊழல் புகார்களில் நடவடிக்கை எடுக்காதது குறித்து திமுக அரசின் மீது வருத்தம் இருப்பதாக கூறியுள்ளார். தன் மீதான ஊழல் புகாருக்கு எதிராக எடப்பாடி பழனிச்சாமி உச்ச நீதிமன்றம் சென்றது ஏன் என்றும் கேள்வி எழுப்பினார். உச்சநீதிமன்றம் வரை சென்ற தடையானை பெற்றது குறித்து எடப்பாடி பழனிச்சாமிக்கு கேள்விகளையும் முன் வைத்தார்.
இதையும் படிங்க: உங்க கனவை சொல்லுங்க… தமிழக அரசின் புதிய திட்டம்..! அமைச்சர் அன்பில் மகேஷ் விளக்கம்…!