சசிகலா, ஓபிஎஸ், டிடிவி தினகரன் உள்ளிட்டோரை மீண்டும் கட்சியில் இணைக்கும் நோக்கத்தில், அதிமுகவிலிருந்து பிரிந்து சென்றவர்களை ஒன்றிணைக்க வேண்டும் என்றும் அப்போதுதான் அதிமுகவின் நல்லாட்சி மலரும் எனவும் கூறி நேற்றைய தினம் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் பேசினார். பத்து நாட்களுக்குள் அதற்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் எனக் கூறி எடப்பாடி பழனிச்சாமிக்கு கெடு விதித்தார். தலைமைக்கே கெடு விதித்த செங்கோட்டையனின் கட்சிப்பதவியை பறித்து எடப்பாடி பழனிச்சாமி உத்தரவிட்டார்.
அதுமட்டுமல்லாது செங்கோட்டையனின் ஆதரவாளர்கள் 7 பேரின் கட்சிப் பதவியும் பறிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் அதிமுகவை ஒருங்கிணைக்கும் முயற்சி தொடரும் என்று செங்கோட்டையன் கூறியுள்ளார். நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப் பெருந்தகை செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, அதிமுகவில் நடக்கும் பிரச்சனைகள் தொடர்பாக எடுத்து கூறினார். அதிமுக ஒன்றிணை வேண்டும் என்றும் அப்போது தான் திமுகவை ஒழிக்க முடியும் என்றும் கூறப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், யார் ஒன்று சேர்ந்தாலும் இந்தியா கூட்டணிக்கு எந்த பாதகமும் கிடையாது என்றும் எங்கள் கூட்டணி மிகவும் வலுவாக உள்ளது எனவும் செல்வப் பெருந்தகை தெரிவித்தார். அதிமுகவின் அனைத்து அணைகளும் ஒன்றாக இணைந்தால் கூட வேறு ஒருவர் தான் எதிர் கட்சி தலைவராக இருப்பார் என்று தெரிவித்தார். அவரது வீட்டு வாசலில் எடப்பாடி பழனிச்சாமி போய் நிற்கும் நிலை உருவாகும் என்றும் தற்போதைய சூழ்நிலையில் தமிழகத்தில் மூன்றாவது அணி உருவாகும் வாய்ப்பே கிடையாது என்றும் தெரிவித்தார்.
இதையும் படிங்க: #BREAKING: செங்கோட்டையன் இடத்தைப் பிடித்தார் ஏ.கே செல்வராஜ்… அரசியலில் பரபரப்பு
அதிமுக இப்படி நான்காக உடைந்து இருப்பதற்கு காரணமே பாஜக தான் என்று குற்றம் சாட்டினார். பாஜக இருக்கும் இடம் சர்வநாசம் என்றும் பாமகவில் நடக்கும் பிரச்சினைகளுக்கே பாஜக தான் காரணம் எனவும் கூறினார்.
இதையும் படிங்க: #BREAKING: என்கிட்ட விளக்கம் கேட்டீங்களா? அவங்களே முடிவு பண்ணிட்டாங்க... செங்கோட்டையன் ஆதங்கம்