எடப்பாடி பழனிசாமி, 2017 முதல் 2021 வரை தமிழ்நாட்டின் முதலமைச்சராகப் பதவி வகித்தவர். 2023 மார்ச் 28 முதல் அதிமுகவின் பொதுச்செயலாளராகவும், தமிழ்நாடு சட்டமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவராகவும் உள்ளார். அவரது தலைமையின் கீழ், அதிமுக 2021 சட்டமன்றத் தேர்தலில் தோல்வியடைந்தாலும், கட்சியை ஒருங்கிணைத்து, உட்கட்சி பிளவுகளைச் சமாளித்து முன்னோக்கி நகர்த்திய பெருமை அவருக்கு உண்டு. மறுபுறம், கே.ஏ. செங்கோட்டையன், அதிமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவராகவும், பல ஆண்டுகளாக அமைச்சராகப் பதவி வகித்தவராகவும், கோபிச்செட்டிபாளையம் தொகுதி சட்டமன்ற உறுப்பினராகவும் உள்ளார்.
செங்கோட்டையன், கட்சியின் அடிமட்டத் தொண்டர்கள் மத்தியில் செல்வாக்கு மிக்கவராகக் கருதப்படுகிறார். ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே தனது ஆதரவாளர்களுடன் செங்கோட்டையன் ஆலோசனை நடத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், வரும் செப்டம்பர் 5ஆம் தேதி கோபிசெட்டிபாளையம் அலுவலகத்தில் தான் மனம் திறந்து பேச இருப்பதாக தெரிவித்தார். அதிமுகவில் இருந்து விலகியவர்களை மீண்டும் கட்சியில் இணைக்க வேண்டும் என்றும் அப்போதுதான் தமிழகத்திற்கு நல்லாட்சி கொடுக்க அதிமுக ஆட்சி அமையும் என்றும் தெரிவித்திருந்தார்.

அதற்கான முயற்சிகளை பத்து நாட்களுக்குள் எடுக்க வேண்டும் என்று எடப்பாடி பழனிச்சாமிக்கு கெடு விதித்திருந்தார் செங்கோட்டையன். தலைமைக்கு கெடு விதித்து இருந்த செங்கோட்டையனின் கட்சிப் பதவியை பறித்து அதிரடி உத்தரவை பிறப்பித்தார் எடப்பாடி பழனிச்சாமி. இதன் பிறகு செங்கோட்டையனின் ஆதரவாளர்களின் கட்சி பதவியையும் பறித்தார். இதன் விளைவாக செங்கோட்டையன் ஆதரவு அதிமுக நிர்வாகிகள் தங்களது பதவியை ராஜினாமா செய்வதாக கடிதம் கொடுத்தனர். இருப்பினும் அதிமுகவை ஒன்றிணைக்கும் முயற்சியில் ஈடுபடுவேன் என்று செங்கோட்டையன் கூற, ஓபிஎஸ் மற்றும் டிடிவி தினகரன் ஆதரவாளர்கள் செங்கோட்டையனை சந்தித்து தங்களது முழு ஆதரவை தெரிவித்தனர்.
இதையும் படிங்க: ஓபிஎஸ், டிடிவி தினகரனுடன் செங்கோட்டையன் சந்திப்பு? - எடப்பாடி பழனிசாமிக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி...!
இப்படியாக போய்க்கொண்டிருக்க எடப்பாடி பழனிச்சாமிக்கு செங்கோட்டையன் விதித்த கெடு இன்றுடன் நிறைவு பெறுகிறது. எனவே செங்கோட்டையன் என்ன முடிவு எடுக்கப் போகிறார் என்பது தொடர்பான விவாதங்கள் அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக மாறி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. செங்கோட்டையன் அதிமுகவிலிருந்து விலகுவாரா அல்லது வேறு ஏதேனும் அரசியல் உத்தியை பயன்படுத்துவாரா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
இதையும் படிங்க: அம்புட்டு தானா? Rest mode-ல் தொண்டர்கள்… வெறிச்சோடிய செங்கோட்டையன் வீடு