தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், ஈரோடு மாவட்டத்தில் இன்று மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியை நடத்துகிறார். இது கரூர் துயர சம்பவத்துக்குப் பிறகு தமிழ்நாட்டில் அவர் நடத்தும் முதல் பெரிய பொதுக்கூட்டமாகும். பெருந்துறை தாலுகாவில் உள்ள விஜயமங்கலம் சுங்கச்சாவடி அருகே சரளை என்ற இடத்தில் உள்ள 19 ஏக்கர் தனியார் நிலத்தில் இந்த நிகழ்ச்சி காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டது.
போலீசார் அனுமதி வழங்கியுள்ள நிலையில், சுமார் 2000க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.கரூர் சம்பவத்துக்குப் பிறகு விஜயின் மக்கள் சந்திப்பு பயணம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்தது. அதன்பிறகு காஞ்சிபுரத்தில் உள்ளரங்கு சந்திப்பும், புதுச்சேரியில் பொதுக்கூட்டமும் நடத்தப்பட்டன. இப்போது ஈரோடு மாவட்டத்தில் மீண்டும் பொதுக்கூட்ட வடிவில் இந்த சந்திப்பு நடைபெறுகிறது. சென்னையிலிருந்து தனி விமான மூலம் கோவைக்கு விஜய் சென்றடைந்தார்.

சாலை மாறும் ஆக பொதுக்கூட்டம் நடைபெறும் இடத்திற்கு விஜய் புறப்பட்டார். பொதுக் கூட்ட இடத்திற்கு சென்றடைந்த விஜய்க்கு செங்கோட்டையன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பூங்கொத்து கொடுத்து சால்வை அணிவித்து உற்சாகமாக வரவேற்றனர். உற்சாகத்துடன் விஜய் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி தொடங்கிய நிலையில் செங்கோட்டையன் உரையாற்றினார். அப்போது, எப்படி ஆட்சிக்கு வர வேண்டும் என்று பலர் கனவு காண்கிறார்கள் என்றும் தமிழ்நாடு மக்கள் பொறுத்தவரை நாளை தமிழ்நாட்டை ஆளப்போவது புரட்சித் தளபதி விஜய் தான் என்று தெரிவித்தார். இதனை நிரூபிக்கும் வகையில் இன்றைய கூட்டம் கூடி இருப்பதாக தெரிவித்தார்.
இதையும் படிங்க: வா தலைவா... கோவைக்கு சென்றடைந்த விஜய்... தொண்டர்கள் உற்சாக வரவேற்பு...!
இந்த சமுதாயத்திற்கு நல்ல தலைவன் வரவேண்டும் என்ற கனவு நினைவாவதற்கு காலம் வந்துவிட்டது என்று கூறினார். வெற்றி வரலாற்றைப் படைப்பதற்கு பெருந்திரளாக வருகை தந்துள்ளனர் எனவும் தெரிவித்தார். உங்களுக்காகவே வாழ்ந்து கொண்டிருப்பவர் விஜய் என்பதை மறந்து விடக்கூடாது என்று தெரிவித்தார். ஒரு ஆண்டுக்கு 500 கோடி வருவாயை தேவையில்லை என விட்டு விட்டு மக்கள் பணியாற்ற வந்திருப்பதாக விஜயை குறிப்பிட்டு பேசினார்.
இதையும் படிங்க: விஜயை பார்க்க வந்த தொண்டருக்கு வலிப்பு... உடனடி சிகிச்சை அளித்த மருத்துவர்கள்...!