விஜயின் அரசியல் தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் கூறுகின்றனர். அடுத்த ஆண்டு நடக்கும் சட்டமன்றத் தேர்தலை மையமாகக் கொண்டு தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் தனது தேர்தல் சுற்றுப்பயணத்தை உற்சாகத்துடன் தொடங்கி நடத்தி வந்தார். அலைக்கடலென மக்கள் கூட்டம் திரண்டு விஜய்க்கு பேராதரவு கொடுத்தனர். கரூர் சம்பவம் தமிழக வெற்றி கழகத்தை இந்த நிகழ்வு முடக்கிய நிலையில் தற்போது மீண்டு வருகிறது.
சமீபத்தில் விஜய் புதுச்சேரியில் மக்கள் சந்திப்பு கூட்டம் நடத்தினார். இந்த நிலையில் ஈரோட்டில் இன்று அவர் பரப்புரை மேற்கொள்கிறார். ஈரோட்டில் டிசம்பர் 18ஆம் தேதி தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மேற்கொள்ளும் பரப்புரை குறித்து செங்கோட்டையன் விளக்கம் அளித்திருந்தார். பெருந்துறை அடுத்த விஜயமங்கலம் அருகே சரளை பகுதியில் காலை 11:00 மணி முதல் பிற்பகல் ஒரு மணி வரை விஜய் பிரச்சாரம் மேற்கொள்ள இருப்பதாக கூறியிருந்தார்.

இந்த நிலையில் ஈரோட்டில் மக்கள் சந்திப்பு நடத்துவதற்காக விஜய் சென்னையில் இருந்து புறப்பட்டார். சென்னையில் இருந்து கோவை விமான நிலையத்திற்கு விஜய் புறப்பட்டு சென்றார். இன்று 11 மணியளவில் விஜய் மக்கள் சந்திப்பு நடத்துவார் என்று கூறப்பட்டுள்ளது. இதற்காக காலை முதலில் தொண்டர்கள் குவிய தொடங்கினர்.
இதையும் படிங்க: இனி சரவெடி தான்… ஈரோட்டில் இன்று மக்கள் சந்திப்பு… கோவை ஏர்போர்ட்டுக்கு புறப்பட்ட விஜய்…!
சென்னையில் இருந்து தனி விமான மூலம் கோவை சென்ற விஜய் சாலை மார்க்கமாக பிரச்சாரம் நடக்கும் ஈரோட்டை நோக்கி புறப்பட்டார். கோவை விமான நிலையத்திற்கு சென்றடைந்த விஜய் வெளியே வந்ததும் அங்கு கூடியிருந்த தொண்டர்கள் உற்சாகம் முழக்கமிட்டனர். தொண்டர்களை பார்த்ததும் விஜய் கைகளை அசைத்தவாறு இன் முகத்துடன் புறப்பட்டு சென்றார்.
இதையும் படிங்க: கோவை, ஈரோட்டில் முதல்வரின் சுற்றுப்பயணம்... முழு விவரம் வெளியீடு...!