மயிலாடுதுறை வேளாண் துறை இணை இயக்குனர் சேகர் துறை ஊழியர்களை தன்னிச்சையாக இடமாற்றம் செய்வதாகவும் பெண் ஊழியர்களிடம் இரட்டை அர்த்தத்தில் பேசி மன உளைச்சல் ஏற்படுத்துவதாகவும் குற்றம்சாட்டி அவர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி காவிரி படுகை உழவர் பெருமக்கள் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்தனர்.
மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை மாவட்ட வேளாண்துறை இணை இயக்குனராக சேகர் என்பவர் பணியாற்றி வருகிறார் மாவட்ட ஆட்சியரகத்தில் இயங்கி வரும் வேளாண் துறைஅலுவலகத்தில் உதவி மேலாண்மை அலுவலர் மற்றும் பணி அலுவலர்கள் ஆண் பெண் இருபாலர்களையும் தன்னிச்சையாக அவர்களை கேட்காமல் தனது இஷ்டம் போல் பணியாளர்களை இடமாற்றம் செய்து வருகிறார்.
இங்கு வேலை செய்யும் பணியாளர்களை நேர்மையாக பணி செய்ய விடாமல் தடுத்தும் பணி உயர்வை தடுத்து விடுவேன், பணியிடை நீக்கம் செய்து விடுவேன் என பயமுறுத்தும் செயலில் ஈடுபட்டு வருவதாகவும், அவரவர் விருப்பத்தை கேட்காமல் இவரது இஷ்டம் போல் பணியிட மாற்றம் செய்வதாகவும் மேலும் அங்கு பணிபுரியும் பெண் ஊழியர்களிடம் இரட்டை அர்த்தத்தில் பேசி, அவர்களது மனதை புண்படுத்தி வருவதாகவும் கடமைக்கு அப்பாற்பட்டு இவர் சொல் பேச்சை கேட்காத பெண் ஊழியர்களையும் இடம் மாற்றம் செய்வதும் பணி இடைநீக்கம் செய்வதையும் வழக்கமாக வைத்துள்ளார் என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதையும் படிங்க: அரசு மருத்துவமனையில் அவலம்... இளம் பெண் நோயாளியை தொடக்கூடாத இடத்தில் தொட்டு பாலியல் சீண்டல் - காவலாளி கைது...!
துறை ரீதியாக ஆய்வு செய்து அவர் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் அங்கு பணிபுரியும் அலுவலர்களின் விருப்பம் மற்றும் உணவு உற்பத்தி பணிகள் நல்ல முறையில் நடைபெற நடவடிக்கை எடுக்க வேண்டுமென காவிரி படுகை உழவர் பெருமக்கள் சார்பாக மாவட்ட ஆட்சியரகத்தில் நடைபெற்ற குறைதீர் முகாமில் மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்த இடம் அளிக்கப்பட்ட புகார் மனுவில் குறிப்பிட்டுள்ளனர். மாவட்ட ஆட்சியர் உரிய விசாரணை செய்வதாக உறுதி அளித்தார்.
இதையும் படிங்க: சிறுமி வாயை பொத்தி பாலியல் வன்கொடுமை செய்ய முயற்சி... வடமாநில இளைஞரை வெளுத்து வாங்கிய மக்கள்...!