திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்த குடிமங்கலம் பகுதியில் சிறப்பு காவல் ஆய்வாளராக பணியாற்றி வந்தவர் சண்முகவேல். இவர் வழக்கம் போல் நேற்று இரவு ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளார்.
11.30 மணி அளவில் குடிமங்கலம் காவல் நிலையத்திற்கு ஒரு அழைப்பு வந்துள்ளது. அதில் அதிமுக எம்எல்ஏ மகேந்திரன் தோட்டத்தில் தந்தை மகனிடையே சண்டை நடப்பதாக கூறப்பட்டுள்ளது.
இதன் பேரில் சண்டை நடைபெறுவதாக கூறப்பட்ட இடத்திற்கு எஸ் ஐ சண்முகவேல் மற்றும் அவருடன் மேலும் ஒரு காவலர் சென்றதாக கூறப்படுகிறது. மது அருந்திவிட்டு சண்டையில் ஈடுபட்ட நபர்களை எஸ் ஐ சண்முகவேல் கண்டித்து சண்டையை நிறுத்தியதாக சொல்லப்படும் நிலையில் திடீரென அங்கிருந்த கும்பல் காவல் ஆய்வாளரை சரமாரியாக வெட்டி தாக்குதல் நடத்தியுள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் சரிந்த எஸ்ஐ சண்முகவேல் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
இதையும் படிங்க: ரிதன்யா தற்கொலை வழக்கு.. ஐ.ஜியிடம் முக்கிய ஆதாரத்தை கொடுத்த ரிதன்யாவின் தந்தை..!
ரோந்து பணிக்காக சென்ற காவல் ஆய்வாளர் ஒருவர், எம் எல் ஏ வின் தோட்டத்தில் வெட்டி படுகொலை செய்யப்பட்டிருந்த சம்பவம் வெறும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து கொலைக்கான பின்னணி தொடர்பாக விசாரித்து வருகின்றனர்.

இதனிடையே, கொலையாளிகள் இருவரின் செல்போன்களை காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர். கொலை நடந்த இடத்தில் இருந்து 20 கிலோமீட்டர் தொலைவில் செல்போன்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
தலைமுறைவாக உள்ள கொலையாளிகள் மூன்று பேரை போலீசார் தேடி வருகின்றனர். இந்த நிலையில் இரண்டு பேரின் செல்போன்களை கைப்பற்றி விசாரித்து வருவதாக மேற்கு மண்டல ஐஜி தெரிவித்தார்.
கொலையாளிகள் வேறு யாரையாவது தொடர்பு கொண்டுள்ளனரா என்றும் எஸ் ஐ கொலையில் என்ன நடந்தது என்பது தொடர்பாகவும் தொடர்ந்து விசாரித்து வருவதாக கூறினார். அதிமுக எம்எல்ஏ தோட்டத்தில் நடந்த குடும்ப சண்டை குறித்து விசாரிக்க சென்ற போது கொலை நிகழ்ந்துள்ளதாகவும் கூறினார்.
இதையும் படிங்க: அதிரடியாக இறங்கிய டிஐஜி வருண்குமாரின் குழு.. ராமஜெயம் கொலை வழக்கில் திருப்பம் ஏற்படுமா..?