திருச்செந்தூர் அருகே தேர்தலை முன்னிட்டு வாக்காளர்களுக்கு விநியோகம் செய்வதற்காக வீட்டில் பதுக்கி வைக்கப்பட்ட விசில் சின்னம் பொறிக்கப்பட்ட 4971 சில்வர் தட்டுகள் பறிமுதல். பறக்கும் படையினர் கைப்பற்றினர்.
தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அனைத்து பகுதிகளிலும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளது. மேலும் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் திருச்செந்தூர் அருகே உள்ள உடன்குடி பகுதியில் தனிநபர் ஒருவர் வீட்டில் வாக்காளர்களுக்கு விநியோகம் செய்வதற்காக பொருட்களை வீட்டில் பதுக்கி வைத்துள்ளதாக திருச்செந்தூர் பகுதியில் சோதனையில் ஈடுபட்டு வரும் பறக்கும்படை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.
இதையும் படிங்க: விஜயுடன் கூட்டணி..! சுயேட்சை எம்எல்ஏ-வின் மாஸ் முடிவு..!! அதிரும் புதுவை..!!
இதையடுத்து பறக்கும் படை அதிகாரி இசக்கிபாண்டியன் தலைமையில் அதிகாரிகள் இன்று காலை முதல் உடன்குடி பகுதியில் தீவிர ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது உடன்குடி அருகே உள்ள கோட்டவிளை புதுமனை பகுதியில் தமிழ்செல்வன் என்பவரது வீட்டில் 5 மூட்டைகளில் விசில் சின்னம் பொறிக்கப்பட்ட 4971 சில்வர் தட்டுகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து பொருட்களை பறிமுதல் செய்த பறக்கும்படை அதிகாரிகள் பொருட்களை குலசேகரன்பட்டினம் காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: அதிகார மிரட்டலுக்கு இறையாகிறதா ஏழைகள் உயிர்? அழுகிய நிலையில் சடலம்..! தவெக சரமாரி கேள்வி..!!