சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே உள்ள ஓ.சிறுவயல் சாலை அருகே இளைஞர் ஒருவர் அறிவாளால் வெட்டப்பட்டு படுகாயம் அடைந்த நிலையில் கிடந்தார். சம்பவம் அறிந்து வந்த நெடுஞ்சாலை ரோந்து போலீசார் மற்றும் குன்றக்குடி போலீசார் அவரை மீட்டு காரைக்குடி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு இருந்து சிவகங்கை மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டவர் சிகிச்சை பலனின்றி இளைஞர் உயிரிழந்தார்.
விசாரணையில் உயிரிழந்தது. குன்றக்குடி அருகேயுள்ள சாலி கிராமத்தைச் சேர்ந்த ஆறுமுகம் மகன் சின்னராசா என்பது தெரிய வந்தது.இவருக்கும் மண்டபம் பகுதியைச் சேர்ந்த நம்பு முனீஸ்வரர் என்பவருக்கும் முன்விரோதம் இருந்துள்ளது. இந்நிலையில் நம்பு முனீஸ்வரர், தேவகோட்டையைச் ராமசாமி 24 ஆகிய இருவரும் சின்னராசாவை வெட்டி படுகொலை செய்தது தெரியவந்தது.

போலீசார் அவ்விருவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். போலீசார் விசாரணையில், சின்னராசா மற்றும் நம்பு முனீஸ்வரர் இருவரும் கஞ்சா வழக்கில் சிறையில் இருந்தபோது பழக்கம் ஏற்பட்டுள்ளது.
இதையும் படிங்க: உச்சக்கட்ட பதற்றத்தில் சிவகங்கை... களத்தில் இறங்கிய சைபர் க்ரைம்... தென் மண்டல ஐ.ஜி. விடுத்த எச்சரிக்கை...!
சின்னராசா வீட்டிற்கு நம்பு முனீஸ்வரரை அழைத்து வந்துள்ளார். அங்கு சின்னராசாவின் மனைவியுடன் நம்புமுனீஸ்வரனுக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் சின்னராசாவின் மனைவி இவரை விட்டுவிட்டு நம்பு முனீஸ்வரனுடன் சென்றுள்ளார்.
இதனால் சின்னராசா, அவரது மனைவி மற்றும் நம்பு முனீஸ்வரனுக்கு அடிக்கடி சண்டை வந்துள்ளது. இதனால் ஆத்திரம் அடைந்த நம்பு முனீஸ்வரர், தனது நண்பர் ராமசாமியுடன் சேர்ந்து சின்னராசாவை கொலை செய்தது தெரிய வந்துள்ளது. இருவரையும் பிடித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
இதையும் படிங்க: தொடரும் வேட்டை..! சிவகங்கை ரவுடி கொலை விவகாரம்.. மேலும் 2 பேரை தட்டி தூக்கிய போலீஸ்..!!