விழுப்புரம் மாவட்டம் சிறுவாலை கிராமத்தைச் சேர்ந்த பழங்குடியின இருளர் ரமேஷ், செல்லங்குப்பம் பகுதியைச் சேர்ந்த பிரபாகரன் என்பவரிடமிருந்து கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு செங்கல் சூலையில் வேலை செய்வதற்காக முன்பணமாக ரூ.50,000 கடன் பெற்றிருந்தார். இந்தப் பணம் தொடர்பாக இருவருக்கும் நீண்ட நாட்களாக பிரச்சனை இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
பிரபாகரன் பலமுறை பணத்தை திருப்பிக் கேட்டும், ரமேஷ் வழங்காமல் இருந்து வந்ததாக தகவல். இதனையடுத்து, இரண்டு நாட்களுக்கு முன்பு ரமேஷ் வீட்டிற்கு சென்ற பிரபாகரன், அவரை மிரட்டி திட்டியதாக கூறப்படுகிறது. அப்போது “சில நாட்கள் பொறுத்துக் கொள்ளுங்கள், குடும்ப சூழல் காரணமாக பணத்தை திருப்பிக் கொடுக்க முடியவில்லை , ஒரு சில நாட்களில் பணத்தை திருப்பி தருகிறேன்” என்று ரமேஷ் சமாதானப்படுத்தி அனுப்பியுள்ளார்.
இந்த நிலையில், இன்று காலை பள்ளிக்கு சென்ற ரமேஷின் மகன் மாரியப்பனை(15) பள்ளிக்கு அருகாமையில் உள்ள மறைவான இடத்தில் வைத்து 10ஆம் வகுப்பு மாணவன் மாரியப்பனை பிரபாகரன் தாக்கிய உள்ளனர். காயம் பட்ட மாணவன் விழுப்புரம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை சிகிச்சை பெற்று வருகிறார்.
இதையும் படிங்க: தவெக அரசின் முதல் சட்டப்பேரவை கூட்டம்..! கவனம் ஈர்க்கும் பட்ஜெட், முக்கிய அறிவிப்புகள்..!
மாணவன் மாரியப்பன் கூறுகையில், வாயில் துணி கட்டி செருப்பால் தாக்கியதுடன், வயிறு மற்றும் முதுகில் கடுமையாக அடித்ததாகவும், மேலும் பிளேடால் வாயை கிழித்ததாகவும் தெரிவித்துள்ளான். இந்த தாக்குதலில் பிரபாகரனுடன் அடையாளம் தெரியாத ஒருவர் இருந்ததாகவும் கூறப்பட்டுள்ளது.
இதையடுத்து, ரமேஷ் கெடார் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த சம்பவம் தொடர்பாக கெடார் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தந்தை பெற்ற கடனுக்காக மகனை தாக்கிய இந்த சம்பவம் சிறுவாலை கிராமத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
இதையும் படிங்க: #BREAKING இறந்தவர்கள் பெயரில் 7 ஆண்டுகளாக நடந்த மெகா மோசடி... தூத்துக்குடி துறைமுகத்தில் நடந்த பகீர் சம்பவம்...!