திருவாரூர் மாவட்டம் பூந்தோட்டம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நிறைமாத கர்ப்பிணி பெண் ஒருவர் சத்து மாத்திரைகளை வாங்கி சென்றுள்ளார். அதில் அவர் ஏற்கனவே மூன்று மாத்திரைகளை விழுங்கி இருந்த நிலையில், மற்றொரு மாத்திரையில் ஸ்டேப்ளர் பின் இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.

இது குறித்து அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை அணுகி கேட்டதில், இதில் தங்களது தவறு ஒன்றும் இல்லை என்றும் இது குறித்து நீங்கள் புகார் அளிக்கலாம் எனவும் அவர்கள் அறிவுறுத்தியதாக தெரிகிறது. இதனை எடுத்து அந்த கர்ப்பிணிப் பெண் சுகாதாரத் துறையின் புகார் எண்ணுக்கு தொடர்பு கொண்டு புகார் அளித்ததுடன், மாத்திரையில் ஸ்டாப்ளர் பின் இருந்தது குறித்து முதல்வரின் தனி பிரிவிற்கும் புகார் அளித்துள்ளார்.
இதையும் படிங்க: நாளை மறுநாள் நடைபெறவிருந்த ஆண்டுத் தேர்வு ஒத்திவைப்பு... காரணம் இது தான்..!

கர்ப்பிணி பெண்கள் சாப்பிடும் சத்து மாத்திரையில் ஸ்டேப்லர் பின் இருந்த சம்பவம் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க: 2 நாளில் மகனின் திருமணம்.. தந்தை கத்தியால் குத்திக்கொலை.. சமாதானம் செய்ய சென்றவருக்கு விபரீதம்..!