தமிழகத்தின் தெருக்களும் சந்தைகளும் இரவு நேரங்களில் ஒரு தனித்துவமான உயிரோட்டத்துடன் நிறைந்திருக்கும். அந்த உயிரோட்டத்தின் மையத்தில் நின்றிருக்கும் தள்ளுவண்டிகள் அவை வெறும் உணவு விற்பனை இடங்கள் மட்டுமல்ல, எளிய மக்களின் வாழ்க்கையின் அங்கம்.
தள்ளுவண்டி கடைகள் தமிழகத்தின் பொருளாதாரத்தில் முக்கிய இடத்தைப் பெறுகின்றன. 2022இல் இந்தியாவின் ஃபுட் டிரக் சந்தை ரூ. 3,000 கோடியாக இருந்தது.அதில் தமிழகம் முன்னணியில் உள்ளது. சென்னையின் தள்ளுவண்டி கடைகள் பெரும்பாலும் மாலை நேரங்களில் தோன்றும். சூரிய அஸ்தமனத்துடன் தொடங்கி, நள்ளிரவு வரை நீடிக்கும் இந்தக் கடைகள், நகரத்தின் இரவு வாழ்க்கையை உயிர்ப்பிக்கின்றன. மெரினா கடற்கரை, பெசன்ட் நகர், அண்ணா நகர், தி.நகர், மயிலாப்பூர் என எங்கு பார்த்தாலும் ஒரு தள்ளுவண்டி நிற்கும். அவை வெறும் கடைகள் அல்ல.

அவை சமூக சந்திப்பிடங்கள். அலுவலகம் முடிந்து வீடு திரும்பும் இளைஞர்கள், குடும்பத்துடன் உலா வரும் பெற்றோர், இரவு நேர பயணிகள் அனைவரும் இங்கே ஒரு நிமிடம் நின்று, ஒரு ப்ளேட் சாப்பிட்டு, ஒரு சிரிப்பு பகிர்ந்து செல்கிறார்கள். வளர்ந்து வரும் தள்ளுவண்டி கடைகளில் சுகாதாரத்தை பின்பற்றும் வகையில் முக்கிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. தள்ளுவண்டி கடைகள் உரிமம் பெற வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. இதனை ஆய்வு செய்ய அதிகாரிகளுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. எவ்வாறு உரிமம் பெறலாம் என்பது தொடர்பாகவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: இனிமே தான் ஆட்டமே இருக்கு... உருவானது காற்றழுத்த தாழ்வு நிலை... வெளுக்கப்போகுது மழை...!
பானிபூரி, வடை, சூப், சிக்கன் பக்கோடா உள்ளிட்டவற்றை விற்பனை செய்யும் தள்ளுவண்டி கடைகளுக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டது. தள்ளுவண்டி கடை உரிமையாளர்கள் முறையாக உரிமம் பெற உணவு பாதுகாப்புத்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. ஆன்லைன், இ-சேவை மையங்களில் இலவசமாக உரிமத்தை பெற்றுக் கொள்ளலாம் எனவும் தெரிவித்து உள்ளது. உரிமம் பெறாத கடைகளுக்கு அபராதம் விதிக்கப்படும் என்றும் இதுகுறித்து ஆய்வு மேற்கொள்ள அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.
இதையும் படிங்க: அடிச்சு நகர்த்த போகுது... 5 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்... சென்னையிலும் மழை...!