சென்னையின் பழம்பெரும் கல்வி நிறுவனங்களில் ஒன்றான பச்சையப்பன் கல்லூரி, தனது நீண்ட வரலாற்றில் பல சிறந்த அறிஞர்களையும் தலைவர்களையும் உருவாக்கியிருந்தாலும், கடந்த சில தசாப்தங்களாக மாணவர்கள் இடையேயான மோதல்களால் அடிக்கடி செய்திகளில் இடம்பெறுகிறது. இந்த மோதல்கள் பெரும்பாலும் சென்னையின் தனித்துவமான "ரூட் தல" என்ற கலாச்சாரத்தால் உந்தப்பட்டவை.
ஒரு குறிப்பிட்ட பேருந்து அல்லது ரயில் வழித்தடத்தில் யார் ஆதிக்கம் செலுத்துவது என்பதை நிர்ணயிக்கும் "ரூட் தல" என்ற போட்டி, மாணவர்களிடையே கும்பல் மனோபாவத்தை வளர்த்து, வன்முறையாக வெடிக்கச் செய்கிறது. இது சென்னையின் அரசு கல்லூரிகளில், குறிப்பாக பச்சையப்பன் கல்லூரி, பிரசிடென்சி கல்லூரி (மாநிலக் கல்லூரி) மற்றும் சில சமயங்களில் நந்தனம் கலைக்கல்லூரி போன்றவற்றுக்கு இடையே நீண்டகாலமாக நீடிக்கும் பிரச்சினையாக உள்ளது.இந்த "ரூட் தல" போட்டி 1990களிலிருந்தே இருந்து வருகிறது என்றாலும், கடந்த பத்தாண்டுகளில் மட்டும் சென்னை நகர கல்லூரி மாணவர்கள் தொடர்பான வன்முறை சம்பவங்களில் 231 வழக்குகள் பதிவாகியுள்ளன. இதில் பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் 58 வழக்குகளிலும், பிரசிடென்சி கல்லூரி மாணவர்கள் 28 வழக்குகளிலும் தொடர்புடையவர்களாக உள்ளனர்.

இந்த மோதல்கள் பெரும்பாலும் பொது போக்குவரத்து வசதிகளான புறநகர் ரயில்கள், பேருந்துகள் அல்லது ரயில் நிலையங்களில் நிகழ்கின்றன. கற்கள் வீசுதல், கத்தி அல்லது அரிவாள் உபயோகம், கைகலப்பு போன்றவை இதில் அடங்கும். இவை பொதுமக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்துவதோடு, சில சமயங்களில் உயிரிழப்புகளுக்கும் வழிவகுக்கின்றன.
இதையும் படிங்க: 44 ஏடிஎம் கார்டுகள்!! 17 வங்கிக் கணக்குகள்! பாகிஸ்தானில் இருந்து கைமாறிய பெரும் பணம்! அசாம் பெண் கைது!
குரோம்பேட்டை ரயில் நிலையத்தில் மாணவனை வெட்டிக்கொன்ற ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சென்னை குரோம்பேட்டை ரயில் நிலையத்தில் பச்சையப்பன் கல்லூரி மாணவனை வெட்டிக்கொலை செய்து விட்டு அந்த கும்பல் தப்பி ஓடி உள்ளது. இந்த நிலையில் பச்சையப்பன் கல்லூரி மாணவனை வெட்டிய நந்தனம் கல்லூரி மாணவர்கள் ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சிசிடிவி காட்சிகள் உள்ளிட்டவைகள் அடிப்படையில் போலீசார் மாணவனை வெட்டியவர்களை தீவிரமாக தேடி வந்தனர். இந்த நிலையில் கடந்த பதினொன்றாம் தேதி பச்சையப்பன் கல்லூரி மாணவன் சந்தோஷை விட்டுவிட்டு தப்பிச் சென்ற அந்தோணி பால், ஸ்டாலின், இளவரசன், அஜய், கவின், மற்றும் 17 வயது சிறுவனை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: புடின் அறைக்குள் அத்துமீறி நுழைந்த பாகிஸ்தான் பிரதமர்!! 40 நிமிடங்கள் காத்திருக்க வைத்ததால் ஆத்திரம்!