தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளதையடுத்துப் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. மேற்குத் தொடர்ச்சி மலை மாவட்டங்களில் மழை பெய்து வரும் நிலையில் பள்ளி மாணவர்கள் தங்களுக்கு விடுமுறை அறிவிக்கக் கோரி மாவட்ட ஆட்சியர்களுக்கு இன்ஸ்டாகிராமில் செய்தி அனுப்புகின்றனர். இந்தக் குறுஞ்செய்திகள் இணையத்தில் வைரலாகப் பகிரப்பட்டு வருகின்றன.
திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் ஆனந்த் மோகன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மாணவர்கள் அனுப்பிய குறுஞ்செய்திகளைப் பகிர்ந்துள்ளார். அவரது பதிவில், “ஆனா இங்க சில பேரு ‘லீவு விடலனா கலெக்டராவே ஃபெயில்’, ‘பர்த்டேவே டெத் டே’, ‘ரொம்ப டிப்ரஷனா இருக்கு’னு இன்ஸ்டாகிராம்ல ஆஸ்கார் லெவலுக்கு எமோஷனல் பிளாக்மெயில் பண்ணிட்டு இருக்கானுவ.
https://www.instagram.com/reel/De8T3Uohc7A/?utm_source=ig_embed&ig_rid=AXdR30dIRSebRpUfIJzrfJA
உங்க கஷ்டம்லாம் புரியுது, ஆனா இந்த ஓவர் ஆக்டிங் தான்டா தாங்க முடியல! கவலைப்படாதீங்க, நிஜமாவே கனமழை பெஞ்சா, நீங்க யாருமே கேக்காமலேயே லீவு வரும். உங்க சேஃப்டிக்கு இந்த கலெக்டர் அங்கிள் எப்பவும் கேரண்டி! மழை வந்தா நான் பாத்துக்கிறேன், இப்போதைக்கு புக்கப் பாத்து படிங்க!” என்று குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க: அமெரிக்காவுடனான ஒப்பந்தந்தை நிராகரித்தால் மிகப்பெரிய தாக்குதல் நடக்கும்! ஈரானை எச்சரிக்கும் ட்ரம்ப்!

https://www.instagram.com/reel/De8RIRXzrWg/?utm_source=ig_embed&ig_rid=A1xU9gQPGrquLh_8p7Ahk98
இதேபோல கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் பிரதாப் முருகனும் தனது எக்ஸ் பக்கத்தில் மாணவர்கள் அனுப்பிய குறுஞ்செய்திகளை வீடியோவாகப் பகிர்ந்துள்ளார். மாணவர்களின் இந்த வேண்டுகோள்களும் ஆட்சியர்களின் நகைச்சுவையான பதில்களும் சமூக ஊடகங்களில் பரவலாகப் பகிரப்பட்டு வருகின்றன.
மழை காரணமாகப் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு மாணவர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. மாவட்ட ஆட்சியர்கள் தங்கள் பக்கங்களில் இந்தச் செய்திகளைப் பகிர்வதன் மூலம் மாணவர்களுடன் நேரடித் தொடர்பை ஏற்படுத்தி வருகின்றனர். மழை நிலவரம் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. கனமழை பெய்தால் பாதுகாப்புக் கருதி விடுமுறை அறிவிக்கப்படும் என்பதை ஆட்சியர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
மாணவர்களின் இந்த முயற்சியும் ஆட்சியர்களின் பதில்களும் தமிழகம் முழுவதும் கவனத்தை ஈர்த்துள்ளன. சமூக ஊடகங்களில் இந்தப் பதிவுகள் ஆயிரக்கணக்கான லைக்குகளையும் பகிர்வுகளையும் பெற்று வருகின்றன.
இதையும் படிங்க: தீவிரமடைந்த அர்னாப் புயல்..!! மீனவர்களுக்கு எச்சரிக்கை..! வானிலை அப்டேட்.!