• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, October 31, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    தவெகவில் ‘ரெட்டி பிரதர்ஸ்’ அராஜகம்... தமிழகத்திற்கு காத்திருக்கும் பேராபத்து... சி.எம்.விஜய்க்கு வார்னிங் கொடுத்த ஆர்.பி.உதயகுமார்...!

    ரெட்டி சகோதரர்களின் நிர்வாகத் தலையீடு அரசின் வளர்ச்சிக்கு உதவுமா அல்லது அரசுக்கே ஆபத்தாக அமையுமா என்பது முதலமைச்சர் விஜய்க்கே வெளிச்சம் என்றும் அவர் விமர்சித்துள்ளார்.
    Author By Amaravathi Thu, 29 Oct 2026 13:49:58 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    ADMK Ex minister RB Udayakumar slams Cm vijay

    தவெக அரசின் புதிய அரசாணையால் அரசு பணியிடங்கள் குறையும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும், லட்சக்கணக்கான இளைஞர்களின் அரசு வேலைவாய்ப்பு பறிபோகும் நிலை உருவாகியுள்ளதாகவும் முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் குற்றம்சாட்டியுள்ளார். தமிழகத்தில் அதிகார மையங்களின் ஆதிக்கம் அதிகரித்து வருவதாகவும், அரசு நிர்வாகத்தில் ரெட்டி சகோதரர்களின் தலையீடு அதிகரித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

    ரெட்டி சகோதரர்களின் நிர்வாகத் தலையீடு அரசின் வளர்ச்சிக்கு உதவுமா அல்லது அரசுக்கே ஆபத்தாக அமையுமா என்பது முதலமைச்சர் விஜய்க்கே வெளிச்சம் என்றும் அவர் விமர்சித்துள்ளார்.

    நெல் மூட்டைகள் சேதம்: 

    அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் இன்று வெளியிட்டுள்ள வீடியோவில், நெல் மூட்டைகள் மழையில் நனைந்து சேதமடைவதைத் தடுக்க வேண்டும். தற்போது வடகிழக்குப் பருவமழைக் காலம் நிலவி வருகிறது. ஒரு புயல் கரையைக் கடந்து ஆந்திராவை நோக்கிச் சென்றுள்ளது. அடுத்தடுத்து மற்றொரு புயல் உருவாகும் வாய்ப்பும் உள்ளது.

    இதையும் படிங்க: ஆப்பிரிக்காவாக மாறுகிறதா தமிழ்நாடு?... தவெக அரசுக்கு ஆர்.பி. உதயகுமார் கொடுத்த அதிர்ச்சி வைத்தியம்...!

    எனவே, தமிழகம் முழுவதும் மழைக்கால முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். குறிப்பாக, நெல் கொள்முதல் நிலையங்களில் அடுக்கி வைக்கப்பட்டுள்ள நெல் மூட்டைகள் மழையில் நனைந்து வீணாவது தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதனால் விவசாயிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

    தமிழக அரசின் நுகர்பொருள் வாணிபக் கழகத்திற்குச் சொந்தமாக 260 சேமிப்புக் கிடங்குகள் செயல்பட்டு வருகின்றன. இவற்றில் 130 கோடி கிலோ நெல்லைச் சேமிக்க முடியும். மேலும், நுகர்பொருள் வாணிபக் கழகத்திற்குச் சொந்தமாக 575 நிரந்தர நேரடி நெல் கொள்முதல் நிலையங்களும் இயங்கி வருகின்றன.

    இதுதவிர, நெல் அறுவடைக் காலங்களில் தற்காலிகமாக 2,000-க்கும் மேற்பட்ட நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படுகின்றன. இந்தத் தற்காலிக நெல் கொள்முதல் நிலையங்களில் நெல் மூட்டைகள் திறந்தவெளியில், போதிய பாதுகாப்பின்றி அடுக்கி வைக்கப்படுவதால், பருவமழைக் காலங்களில் அவை நனைந்து சேதமடைகின்றன.

    இதனால் விவசாயிகளுக்குப் பெரும் நஷ்டம் ஏற்படுகிறது. எனவே, நெல் மூட்டைகள் மழையில் நனையாமல் பாதுகாக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

    இருப்பினும், இந்த விவகாரத்தில் தவெக அரசு முழுமையான அக்கறை காட்டவில்லை. இந்த ஆண்டு ஆட்சி அமைத்த தொடக்கத்திலேயே நெல் மூட்டைகள் மழையில் நனைந்து கடுமையாகச் சேதமடைந்தன. எனவே, தற்போது நிலவும் வடகிழக்குப் பருவமழைக் காலத்தில் நெல் மூட்டைகள் நனையாமல் பாதுகாக்கத் தேவையான நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டும்.

    வாக்குறுதியை நிறைவேற்றாத தவெக அரசு:

    தற்போது தவெக அரசு ஓர் அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தவெக ஆட்சிக்கு வந்தால், அவுட்சோர்சிங் முறையிலான பணி நியமனம் ஒழிக்கப்படும் என்று வாக்குறுதி அளித்திருந்தனர். ஆனால், அந்த வாக்குறுதியை நிறைவேற்றாமல், தற்போது அவுட்சோர்சிங் முறையிலேயே பணியாளர்களை நியமிக்க முடிவு செய்துள்ளனர்.

    இதன்படி, அரசுத் துறைகள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் அவுட்சோர்சிங் முறையில் பணியாளர்களை நியமிப்பதற்காக, அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்தை முகமையாக நியமித்து, அதற்கான பணிகள் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

    தமிழக அரசின் பல்வேறு துறைகளுக்குத் தேவையான பணியாளர்கள் இதுவரை டிஎன்பிஎஸ்சி (TNPSC), டிஆர்பி (TRB) உள்ளிட்ட தேர்வு வாரியங்கள் மூலம் தேர்வு செய்யப்பட்டு வந்தனர். இனிமேல், இந்தப் பணியிடங்கள் எவ்வாறு நிரப்பப்படும் என்ற கேள்வி எழுந்துள்ளது.

    தற்போது வெளியிடப்பட்டுள்ள அரசாணையால் அரசு பணியிடங்கள் குறையும் அபாயம் ஏற்பட்டுள்ளது. அரசுத் துறைகளில் அவுட்சோர்சிங் முறையில் பணியாளர்களை நியமிப்பதன் மூலம், லட்சக்கணக்கான இளைஞர்களின் அரசு வேலைவாய்ப்புக் கனவு பறிபோகும் நிலை உருவாகியுள்ளது. அவர்களின் எதிர்பார்ப்புகள் வெறும் கனவாகவே முடிந்துவிடுமோ என்ற அச்சமும் ஏற்பட்டுள்ளது.

    அரசுத் துறைகளில் ஐந்து லட்சத்திற்கும் மேற்பட்ட பணியிடங்கள் காலியாக உள்ளன. இந்தப் பணியிடங்களை அரசின் சார்பிலேயே நிரப்ப வேண்டும் என்று இளைஞர்கள் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர். ஆனால், அவர்களின் எதிர்பார்ப்புகள் நிறைவேறுமா என்பது கேள்விக்குறியாக உள்ளது.

    இத்தகைய முடிவுகள் முதலமைச்சரின் கவனத்திற்குச் செல்கின்றனவா, இல்லையா என்ற கேள்வியும் எழுகிறது. அரசாணைகள் வெளியிடப்படுவதும், பின்னர் அவை திரும்பப் பெறப்படுவதும் தொடர்ந்து நடைபெறுகின்றன.

    தமிழகத்தில் அதிகரிக்கும் அதிகார மையங்களின் ஆதிக்கம்:

    தவெக ஆட்சியில் அதிகார மையங்களின் ஆதிக்கம் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. அத்தகைய அதிகார மையங்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. அதிகாரிகள் நியமனம் தொடங்கி, அரசின் முக்கிய முடிவுகள் எடுப்பது வரை அனைத்தையும் விஷ்ணு ரெட்டியே கவனித்து வருவதாகச் சொல்லப்படுகிறது.

    இந்த நிலையில், விஷ்ணு ரெட்டியின் உறவினரான சுஜய் ரெட்டியின் அதிகாரமும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஜான் ஆரோக்கியசாமி, ஜெகதீஷ் பழனிச்சாமி உள்ளிட்டோர் முக்கிய அதிகார மையங்களாகச் செயல்பட்டு வரும் நிலையில், தற்போது ரெட்டி சகோதரர்களும் முக்கிய அதிகார மையமாக உருவெடுத்து, அரசு நிர்வாகத்தில் பங்களித்து வருவதாக ஆர்.பி. உதயகுமார் தெரிவித்துள்ளார்.

    ரெட்டி சகோதரர்களின் இந்தத் தலையீடு தமிழகத்தை முன்னோக்கி அழைத்துச் செல்லுமா அல்லது பின்னோக்கித் தள்ளிவிடுமா என்ற கேள்வி எழுந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதற்கான பதில் முதலமைச்சர் விஜய்க்கே வெளிச்சம் என்றும் விமர்சித்துள்ளார்.

    முதலமைச்சருக்குத் தெரியாமலேயே முடிவுகள் எடுக்கப்படுகிறதா?

    ரெட்டி சகோதரர்கள் தற்போது அரசு நிர்வாகத்தில் முழுமையான ஆதிக்கம் செலுத்தி வருவதாகவும், அவர்களின் அதிகாரத்திற்கு உட்பட்டே அரசு நிர்வாகம் செயல்படுவதாகவும் ஆர்.பி. உதயகுமார் குற்றம்சாட்டியுள்ளார். பல்வேறு முடிவுகள் முதலமைச்சருக்குத் தெரியாமலேயே எடுக்கப்படுவதாகச் செய்திகள் வெளிவருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

    அரசாணைகளை வெளியிடுவதும், பின்னர் அவற்றைத் திரும்பப் பெறுவதும், எதிர்ப்புகள் எழுந்த பிறகு முடிவுகளில் இருந்து பின்வாங்குவதும் தொடர்கின்றன. எனவே, ஒவ்வொரு முடிவையும் எடுப்பதற்கு முன்பாக முதலமைச்சர் உரிய ஆலோசனைகளைப் பெறுகிறாரா, இல்லையா என்பதுதான் தற்போது கேள்வியாக உள்ளது.

    ரெட்டி சகோதரர்களின் அரசு நிர்வாகத் தலையீடு அரசின் வளர்ச்சிக்கு உதவுமா அல்லது அரசுக்கே ஆபத்தை ஏற்படுத்துமா? அது அரசுக்குப் பாதுகாப்பாக அமையுமா அல்லது பாதிப்பை ஏற்படுத்துமா? ரெட்டி சகோதரர்களின் தலையீடு தொடர்பான இந்தக் கேள்விகளுக்கான பதில் முதலமைச்சர் விஜய்க்கே வெளிச்சம் என்று முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தெரிவித்துள்ளார்.

    இதையும் படிங்க: வாய் திறக்காத முதலமைச்சர் விஜய்... தமிழகமே சர்ச்சையான விவகாரத்தில் வெடியை கொளுத்திப் போட்ட ஆர்.பி.உதயகுமார்...!

    மேலும் படிங்க
    விஜய் அரசுக்கு எதிராக திமுக மகளிரணி போர்க்கொடி..!  தவெக அரசை சாடிய தங்கம் தென்னரசு..!!

    விஜய் அரசுக்கு எதிராக திமுக மகளிரணி போர்க்கொடி..! தவெக அரசை சாடிய தங்கம் தென்னரசு..!!

    தமிழ்நாடு
    மீண்டும் பிக் பாஸ் மேடைக்கு வந்த மக்கள் செல்வன் விஜய் சேதுபதி.!! அதே குரலுடன் திரும்பியதால் ரசிகர்கள் அதிர்ச்சி.. வெளியான முதல் புரோமோ..!

    மீண்டும் பிக் பாஸ் மேடைக்கு வந்த மக்கள் செல்வன் விஜய் சேதுபதி.!! அதே குரலுடன் திரும்பியதால் ரசிகர்கள் அதிர்ச்சி.. வெளியான முதல் புரோமோ..!

    சினிமா
    பொங்கலுக்கு தயாராகும் பா. ரஞ்சித்தின் ‘வேட்டுவம்’..!! ஆர்யா, அட்டகத்தி தினேஷ் நடிப்பில் உருவாகும் பட ரிலீஸ் தேதி அறிவிப்பு வந்தாச்சு..!

    பொங்கலுக்கு தயாராகும் பா. ரஞ்சித்தின் ‘வேட்டுவம்’..!! ஆர்யா, அட்டகத்தி தினேஷ் நடிப்பில் உருவாகும் பட ரிலீஸ் தேதி அறிவிப்பு வந்தாச்சு..!

    சினிமா
    தேனி சிறை தப்பியோட்டம் எதிரொலி..! இரவோடு இரவாக கைதிகள் இடமாற்றம்..! ஸ்ரீவைகுண்டம் கிளைச் சிறையை மூடிய சிறைத்துறை..!!

    தேனி சிறை தப்பியோட்டம் எதிரொலி..! இரவோடு இரவாக கைதிகள் இடமாற்றம்..! ஸ்ரீவைகுண்டம் கிளைச் சிறையை மூடிய சிறைத்துறை..!!

    தமிழ்நாடு
    7 ஆண்டுகளாக கிடப்பில் இருந்த 224 படங்களின் மானியத் தொகை..!! ஒரே உத்தரவால்  விடுவித்த CM விஜய்.. தயாரிப்பாளர் டி. சிவா நெகிழ்ச்சி..!

    7 ஆண்டுகளாக கிடப்பில் இருந்த 224 படங்களின் மானியத் தொகை..!! ஒரே உத்தரவால் விடுவித்த CM விஜய்.. தயாரிப்பாளர் டி. சிவா நெகிழ்ச்சி..!

    சினிமா
    கூடும் மவுசு.!! காவிரி டெல்டாவில் 65% சன்னரக நெல் சாகுபடி..! அமைச்சர் வினோத் வெளியிட்ட முக்கிய தகவல்!

    கூடும் மவுசு.!! காவிரி டெல்டாவில் 65% சன்னரக நெல் சாகுபடி..! அமைச்சர் வினோத் வெளியிட்ட முக்கிய தகவல்!

    தமிழ்நாடு

    செய்திகள்

    விஜய் அரசுக்கு எதிராக திமுக மகளிரணி போர்க்கொடி..!  தவெக அரசை சாடிய தங்கம் தென்னரசு..!!

    விஜய் அரசுக்கு எதிராக திமுக மகளிரணி போர்க்கொடி..! தவெக அரசை சாடிய தங்கம் தென்னரசு..!!

    தமிழ்நாடு
    தேனி சிறை தப்பியோட்டம் எதிரொலி..! இரவோடு இரவாக கைதிகள் இடமாற்றம்..! ஸ்ரீவைகுண்டம் கிளைச் சிறையை மூடிய சிறைத்துறை..!!

    தேனி சிறை தப்பியோட்டம் எதிரொலி..! இரவோடு இரவாக கைதிகள் இடமாற்றம்..! ஸ்ரீவைகுண்டம் கிளைச் சிறையை மூடிய சிறைத்துறை..!!

    தமிழ்நாடு
    கூடும் மவுசு.!! காவிரி டெல்டாவில் 65% சன்னரக நெல் சாகுபடி..! அமைச்சர் வினோத் வெளியிட்ட முக்கிய தகவல்!

    கூடும் மவுசு.!! காவிரி டெல்டாவில் 65% சன்னரக நெல் சாகுபடி..! அமைச்சர் வினோத் வெளியிட்ட முக்கிய தகவல்!

    தமிழ்நாடு
    “நான் அடிச்சா தாங்க மாட்ட...” - சி.எம்-ஐ டேரக்ட்டாக வம்பிழுத்த மேயர் பிரியா... திமுக ஆர்ப்பாட்டத்தில் பரபரப்பு...!

    “நான் அடிச்சா தாங்க மாட்ட...” - சி.எம்-ஐ டேரக்ட்டாக வம்பிழுத்த மேயர் பிரியா... திமுக ஆர்ப்பாட்டத்தில் பரபரப்பு...!

    அரசியல்
    #BREAKING மீண்டும் மீண்டுமா? சென்னையில் இருந்து கைதி தப்பியோட்டம்... விஜய் அரசை விடாமல் துரத்தும் சோதனை...!

    #BREAKING மீண்டும் மீண்டுமா? சென்னையில் இருந்து கைதி தப்பியோட்டம்... விஜய் அரசை விடாமல் துரத்தும் சோதனை...!

    அரசியல்
    அடுத்து சேலமா? பாளையங்கோட்டையா?... Inky Pinky Ponky போடும் கைதிகள்... விஜய் அரசை விளாசிய உதயநிதி...!

    அடுத்து சேலமா? பாளையங்கோட்டையா?... Inky Pinky Ponky போடும் கைதிகள்... விஜய் அரசை விளாசிய உதயநிதி...!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2026, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share