தமிழ்நாடு அரசு, 2025-26 கரிப் பருவத்திற்கு நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதார விலையை (MSP) உயர்த்தி அரசாணை வெளியிட்டுள்ளது. முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவின்படி, வரும் செப்டம்பர் 1ம் தேதி முதல் அடுத்த ஆண்டு ஆகஸ்ட் 31ம் தேதி வரை நெல் கொள்முதல் விலை மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

அதன்படி சாதாரண நெல்லின் ஆதார விலை குவிண்டாலுக்கு ரூ.131 உயர்த்தி 2500 ரூபாய்க்கு கொள்முதல் செய்யப்பட உள்ளது. அதேநேரம், சன்ன ரக நெல்லுக்கு ஒரு குவிண்டாலுக்கு ரூ.156 உயர்த்தி 2 ஆயிரத்து 545 ரூபாய் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: இனி நுங்கம்பாக்கம் கல்லூரி சாலை ‘ஜெய்சங்கர் சாலை’ என அழைக்கப்படும்.. தமிழக அரசு அரசாணை வெளியீடு..!
இந்த விலை உயர்வு, குறிப்பாக காவிரி டெல்டா பகுதி விவசாயிகளுக்கு பெரும் ஆதரவாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு, தமிழ்நாடு அரசு தொடர்ந்து ஆதரவு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
இந்த விலை உயர்வு, விவசாயிகளின் வருமானத்தை மேம்படுத்துவதோடு, பொது விநியோக முறையை வலுப்படுத்தவும் உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது. நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதார விலையை உயர்த்திய தமிழக அரசின் முடிவு விவசாயிகள் இடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய அரசு நிர்ணயிக்கும் ஆதரவு விலையுடன், மாநில அரசு கூடுதலாக ஊக்கத்தொகையும் சேர்த்து இந்த ஆதரவு விலையை உயர்த்தி அறிவிக்கும். இதேபோல் தமிழகத்தில் விவசாயிகளின் நலன் கருதி நெல், பருத்தி, மக்காச்சோளம் உள்ளிட்ட 14 வகை காரீப் பருவ பயிர்களுக்கும், குறைந்தபட்ச ஆதரவு விலை அறிவிக்கப்பட்டு வருகிறது.
இதையும் படிங்க: அடேங்கப்பா..!! 30 நாளில் இத்தனை லட்சம் மனுக்களா..!! வெற்றிநடைபோடும் 'உங்களுடன் ஸ்டாலின்' முகாம்..!