தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பிறகு தமிழக வெற்றிக் கழகம் தலைமையிலான அரசு நம்பிக்கை வாக்கெடுப்பில் பெரும்பான்மையை நிரூபித்த சமயத்தில், எதிர்க்கட்சிகள் மற்றும் சில தனிநபர்கள் கடும் குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர். அதாவது, ஆட்சியை தக்கவைக்க அல்லது பெரும்பான்மை பெற “குதிரை பேரம்” நடைபெற்றதாகவும், பெரும் தொகை பணப் பரிவர்த்தனைகள் நிகழ்ந்ததாகவும் புகார் எழுந்தது.
இந்தப் புகார்களை அடிப்படையாகக் கொண்டு உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட பொதுநல வழக்கு சமீபத்தில் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. தலைமை நீதிபதி சூரியகாந்த் மற்றும் நீதிபதி வி. மோகனா அடங்கிய அமர்வு இந்த உத்தரவைப் பிறப்பித்தது. 2026 தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் தவெக 108 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. ஆனால் ஆட்சியமைக்க 118 இடங்கள் தேவைப்பட்டதால், பிற கட்சிகளின் ஆதரவு தேவைப்பட்டது.

மே 13 அன்று நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் தவெக அரசு 144 வாக்குகளுடன் வெற்றி பெற்றது. DMK உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வாக்கெடுப்பைப் புறக்கணித்தன. அதிமுகவில் இருந்த சில உறுப்பினர்கள் அரசுக்கு ஆதரவாக வாக்களித்ததாகவும், பின்னர் சிலர் ராஜினாமா செய்து தவெகவில் இணைந்ததாகவும் கூறப்பட்டது. இதை “குதிரை பேரம்” என எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டின. சுமார் 1,000 கோடி ரூபாய் அளவுக்கு பணப் பரிவர்த்தனை நடைபெற்றதாகவும் புகார்கள் எழுந்தன.
இதையும் படிங்க: "கோவை மகளின் கம்பீர சாதனை..! மோகனா உட்பட 5 பேர் சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் பதவியேற்பு..!
தொடர்ந்து சென்னையைச் சேர்ந்த KK ரமேஷ் உள்ளிட்டோர் உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனுக்களைத் தாக்கல் செய்தனர். தமிழக சட்டப்பேரவை நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பிற்காக குதிரை பேரம் நடத்தியதாக தொடரப்பட்ட வழக்கு இன்று தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சூரியகாந்தி மற்றும் நீதிபதி மோகனா அடங்கிய அமர்வு தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. குதிரை பேரம் விவகாரத்தை பொதுநல வழக்காக எடுத்து விசாரிக்க முடியாது எனக் கூறி மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்.
இதையும் படிங்க: "பெண்களுக்கு உந்துசக்தி"... உச்ச நீதிமன்ற நீதிபதியாகிய வழக்கறிஞர் மோகனா... முதல்வர் விஜய் வாழ்த்து..!