• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, November 03, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    ஆட்டோவில் ஜிபிஎஸ் மீட்டர் பொருத்தும் திட்டம் அம்போ!! அரசு கைவிட்டதா? பயணிகள் கடும் அதிருப்தி!

    தமிழகத்தில் புதிய ஆட்டோ கட்டணம் அமலுக்கு வந்த நிலையில், ஜிபிஎஸ் வசதியுடன் கூடிய டிஜிட்டல் மீட்டர் திட்டம் குறித்து அரசு மௌனம். திட்டம் கைவிடப்பட்டதா என்ற கேள்வி எழுந்துள்ளது.
    Author By Pandian Fri, 30 Oct 2026 10:56:38 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Tamil Nadu Auto GPS Meter Scheme: Has the Government Dropped the Plan?

    தமிழகத்தில் ஆட்டோக்களுக்கான புதிய கட்டணம் அமலுக்கு வந்துள்ள நிலையில், அனைத்து ஆட்டோக்களிலும் ஜி.பி.எஸ். வசதியுடன் கூடிய டிஜிட்டல் மீட்டர் பொருத்தும் திட்டம் குறித்து அரசு எந்த அறிவிப்பும் வெளியிடாதது பயணிகள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே அறிவிக்கப்பட்ட இந்தத் திட்டம் தற்போது கைவிடப்பட்டதா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

    தமிழகத்தில் ஆட்டோ கட்டணம் கடைசியாக கடந்த 2013-ம் ஆண்டு ஆகஸ்ட் 25-ம் தேதி மாற்றியமைக்கப்பட்டது. சுமார் 13 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது புதிய கட்டணத்தை அரசு நிர்ணயித்துள்ளது. இந்தக் கட்டண முறை நேற்று முன்தினம் முதல் நடைமுறைக்கு வந்துள்ளது. இதையடுத்து, தற்போதுள்ள ஆட்டோ மீட்டர்களில் புதிய கட்டண விவரங்களைத் திருத்துவதற்கு ஆறு மாதங்கள் வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

    கடந்த 2013-ம் ஆண்டு ஆட்டோ கட்டணம் உயர்த்தப்பட்டபோதே, ஆட்டோக்களில் ஜி.பி.எஸ். கருவி மற்றும் பயணக் கட்டணத்துக்கான ரசீது வழங்கும் பிரின்டர் வசதியுடன் கூடிய புதிய டிஜிட்டல் மீட்டர்கள் பொருத்தப்படும் என்று அரசு அறிவித்திருந்தது. இந்த மீட்டர்களை 2014-ம் ஆண்டு பிப்ரவரி மாதத்திற்குள் கொள்முதல் செய்து பயன்பாட்டுக்கு கொண்டு வரவும் திட்டமிடப்பட்டது.

    இதையும் படிங்க: கிரானைட் தொழிலதிபர் வீரமணி வழக்கில் முக்கிய திருப்பம்!! டிரைவர்களை அடையாளம் காட்டிய சிறுமிகள்!

    இதற்கான டெண்டர் மற்றும் கொள்முதல் பணிகள் அரசு மின்னணு கழகமான எல்காட் வசம் ஒப்படைக்கப்பட்டன. ஆனால், பல்வேறு காரணங்களால் திட்டத்தைச் செயல்படுத்துவதற்கான காலக்கெடு தொடர்ந்து நீட்டிக்கப்பட்டது. இருந்தபோதிலும், அறிவிக்கப்பட்ட காலத்திற்குள் ஜி.பி.எஸ். வசதியுடன் கூடிய டிஜிட்டல் மீட்டர்கள் ஆட்டோக்களில் பயன்பாட்டுக்கு வரவில்லை.

    AutoDrivers

    தற்போது புதிய ஆட்டோ கட்டணம் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், பழைய மீட்டர்களிலேயே கட்டணத்தைத் திருத்திக் கொள்ள ஆறு மாதங்கள் அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. ஆனால், 2013-ம் ஆண்டு அறிவிக்கப்பட்ட ஜி.பி.எஸ். வசதியுடன் கூடிய டிஜிட்டல் மீட்டர் திட்டம் குறித்து புதிய அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை. இதனால், அந்தத் திட்டம் கைவிடப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் பயணிகள் மத்தியில் எழுந்துள்ளது.

    ஆட்டோக்களில் ஜி.பி.எஸ். வசதி இருந்தால், அவை செல்லும் வழித்தடத்தைக் கண்காணிக்கவும், பயணத்தின் விவரங்களைப் பதிவு செய்யவும் வாய்ப்பு ஏற்படும். குறிப்பாக, பெண்கள் மற்றும் குழந்தைகள் தனியாக ஆட்டோவில் பயணிக்கும் சூழலில், பாதுகாப்பு தொடர்பான புகார்கள் எழும்போது வாகனத்தின் இருப்பிடத்தை அறிய இந்த வசதி உதவக்கூடும். மேலும், டிஜிட்டல் மீட்டருடன் ரசீது வழங்கும் வசதி இருந்தால், பயணக் கட்டணம் தொடர்பான புகார்களுக்கும் ஆதாரமாக அமையும்.

    இதுகுறித்து தமிழக முற்போக்கு நுகர்வோர் மையத் தலைவர் சடகோபன் கூறுகையில், பெண்களும் குழந்தைகளும் தனியாகப் பயணிக்கும் நிலை இருப்பதால், பயணிகளின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு அனைத்து ஆட்டோக்களிலும் ஜி.பி.எஸ். கருவிகள் கட்டாயம் பொருத்தப்பட வேண்டும். அப்போதுதான் ஆட்டோக்களின் இயக்கத்தைக் கண்காணிக்க முடியும் என்று வலியுறுத்தியுள்ளார்.

    இதற்கிடையே, ஜி.பி.எஸ். வசதியுடன் கூடிய டிஜிட்டல் மீட்டர் திட்டம் தொடர்பாக தமிழக போக்குவரத்து ஆணையரக அதிகாரிகளிடம் கேட்கப்பட்டபோது, அந்தத் திட்டத்தைச் செயல்படுத்துவது குறித்து தமிழக அரசுதான் முடிவெடுத்து அறிவிக்கும் என்று தெரிவித்துள்ளனர்.

    இதனால், புதிய ஆட்டோ கட்டணம் அமலுக்கு வந்துள்ள நிலையில், ஏற்கனவே அறிவிக்கப்பட்ட ஜி.பி.எஸ். டிஜிட்டல் மீட்டர் திட்டம் மீண்டும் செயல்படுத்தப்படுமா அல்லது கைவிடப்படுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இதுகுறித்து தமிழக அரசு தெளிவான முடிவை அறிவிக்க வேண்டும் என்பதே பயணிகளின் கோரிக்கையாக உள்ளது.

    இதையும் படிங்க: தமிழகத்தில் அதிக வருமானம் ஈட்டும் டாப் 10 கோவில்கள்! ரூ.233.50 கோடியுடன் பழனி முதலிடம்!

    மேலும் படிங்க
    தமிழகத்தை குறிவைக்கும் நவம்பர் புயல்? வானிலை மையம் சொன்ன அதிமுக்கிய தகவல்! கொட்டப்போகும் கனமழை!

    தமிழகத்தை குறிவைக்கும் நவம்பர் புயல்? வானிலை மையம் சொன்ன அதிமுக்கிய தகவல்! கொட்டப்போகும் கனமழை!

    தமிழ்நாடு
    ஆந்திராவை புரட்டிப்போடும் முரசு புயல்! 13 மாவட்டங்களுக்கு மிக கனமழை எச்சரிக்கை! நவம்பர் 5 வரை நீடிக்கும் பாதிப்பு!

    ஆந்திராவை புரட்டிப்போடும் முரசு புயல்! 13 மாவட்டங்களுக்கு மிக கனமழை எச்சரிக்கை! நவம்பர் 5 வரை நீடிக்கும் பாதிப்பு!

    இந்தியா
    தவெகவினர் அதிருப்தி..! குட்டையை குழப்பி மீன் பிடிக்க பாக்குறாங்க..!  ரகுபதி காட்டம்..!!

    தவெகவினர் அதிருப்தி..! குட்டையை குழப்பி மீன் பிடிக்க பாக்குறாங்க..! ரகுபதி காட்டம்..!!

    தமிழ்நாடு
    "மொட்டை கடுதாசி" போல பேசுவது அமைச்சருக்கு அழகல்ல.! முறைகேடு சர்வ சாதாரணமாகிடுச்சோ.?   நயினார் நாகேந்திரன் சாடல்.!!

    "மொட்டை கடுதாசி" போல பேசுவது அமைச்சருக்கு அழகல்ல.! முறைகேடு சர்வ சாதாரணமாகிடுச்சோ.? நயினார் நாகேந்திரன் சாடல்.!!

    தமிழ்நாடு
    வார்த்தையை விட்டு சிக்கிய அமைச்சர் ராஜ்மோகன்... திமுகவுக்கு அடுத்து சீனுக்கு வந்த அதிமுக... தவெகவுக்கு செம்ம செக்கா?

    வார்த்தையை விட்டு சிக்கிய அமைச்சர் ராஜ்மோகன்... திமுகவுக்கு அடுத்து சீனுக்கு வந்த அதிமுக... தவெகவுக்கு செம்ம செக்கா?

    அரசியல்
    நான் ரெடி தான் வரவா?... 7 இடங்களில் ரோடு ஷோ... பெருந்துறையில் சி.எம். விஜய் செய்யப்போகும் மாஸ் சம்பவங்களின் லிஸ்ட்...!

    நான் ரெடி தான் வரவா?... 7 இடங்களில் ரோடு ஷோ... பெருந்துறையில் சி.எம். விஜய் செய்யப்போகும் மாஸ் சம்பவங்களின் லிஸ்ட்...!

    அரசியல்

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2026, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share