சட்டமன்ற தேர்தல் வர உள்ளதால் கவர்ச்சிகரமான திட்டங்களைக் காட்டி வாக்காளர்களைக் கவர ஆளும் கட்சியான திமுக திட்டமிட்டு வருகிறதாம். சுதந்திர தின உரையின் போது நாட்டுமக்களுக்கு உரையாற்றிய பிரதமர் மோடி, தீபாவளி அன்று மக்களுக்கு டபுள் தமக்கா பரிசு காத்திருக்கிறது என அறிவித்தார். அதன்படி அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் நடுத்தர மக்கள் வாங்கும் கார், பைக், வீட்டு உபயோக பொருட்கள் மீதான ஜிஎஸ்டி வரியை கணிசமான அளவு குறைக்கவுள்ளது. இதற்கு, 10,000 கோடி ரூபாய் தேவை என்பதால், அதற்கான நிதி ஏற்பாட்டை மேற்கொள்ளுமாறு, நிதித்துறையை அரசு அறிவுறுத்தி உள்ளது.
இது பாஜக கையில் எடுக்கவுள்ள தேர்தல் பிரச்சார யுக்தியாக பார்க்கப்படும் நிலையில், திமுகவும் வர உள்ள சட்டமன்ற தேர்தலை கருத்தில் கொண்டு பொங்கல் பரிசை அதிகரிக்க முடிவெடுத்துள்ளது.
தமிழகத்தில் பொங்கல் பண்டிகைக்கு, ரேஷன் கடைகள் வாயிலாக, 2.20 கோடி அரிசி கார்டுதாரர்களுக்கு, பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படுகிறது. வரும், 2026 சட்டசபை தேர்தலுக்கு, இன்னும் ஏழு மாதங்களே உள்ளன. இந்த தேர்தலில் கூட்டணி கட்சிகளுடன் சேர்த்து, 200 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைக்க, ஆளும் கட்சியான திமுக முடிவு செய்துள்ளது.
இதையும் படிங்க: ஜெயில்ல இருந்து ஆட்சி பண்ணலாமா? மசோதாவுக்கு வலுக்கும் எதிர்ப்பு? அமித்ஷா ஆத்திரம்!!
இதற்காக, வாக்காளர்களை கவரும் வகையில் பல்வேறு திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. அதன் அடிப்படையில், வரும் பொங்கலுக்கு கார்டுதாரர்களுக்கு தலா, 5,000 ரூபாய் வழங்க முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு தீபாவளி அன்று வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: தலைநகரை தொடரும் வெடிகுண்டு மிரட்டல்!! மிரளும் பள்ளி மாணவர்கள்!! அச்சத்தில் உறையும் பெற்றோர்!!