தமிழ்நாட்டில் மக்களின் நிர்வாக மற்றும் அடிப்படைத் தேவைகளை விரைந்து நிறைவேற்றும் நோக்கில், ஆறு மாவட்டங்களில் ஏற்கெனவே இருந்த ஊராட்சி ஒன்றியங்களைப் பிரித்து, ஏழு புதிய ஊராட்சி ஒன்றியங்களை உருவாக்கித் தமிழ்நாடு அரசு இன்று (டிசம்பர் 10) அரசாணை வெளியிட்டுள்ளது. இந்த நடவடிக்கை, மாவட்டங்களில் உள்ள கிராமப்புற மக்களுக்கு நிர்வாக ரீதியாக மிகுந்த பயனளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பெரிய பரப்பளவு கொண்ட ஊராட்சி ஒன்றியங்களில், தொலைதூரக் கிராமங்களுக்கு அடிப்படைத் திட்டங்களைக் கொண்டு சேர்ப்பதிலும், பொதுமக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதிலும் காலதாமதம் ஏற்படுவதைத் தவிர்க்கவும், உள்ளாட்சி நிர்வாகத்தை மக்களின் அருகே கொண்டு செல்லவும் இந்தச் சீரமைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
திருவள்ளூர், காஞ்சிபுரம், விழுப்புரம், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி மற்றும் இராமநாதபுரம் ஆகிய ஆறு மாவட்டங்களில் மொத்தமாகப் பின்வரும் ஏழு புதிய ஊராட்சி ஒன்றியங்கள் உருவாக்கப்பட்டுள்ளன:திருவள்ளூர் - கும்மிடிப்பூண்டி ஊராட்சி ஒன்றியத்தைப் பிரித்து மாதர்பாக்கம் ஊராட்சி ஒன்றியம்,
இதையும் படிங்க: உலகமெங்கும் தமிழ் கலாச்சாரம்! ஜியோ ஹாட்ஸ்டார் - தமிழக அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம்: ரூ.4,000 கோடி முதலீடு!
- காஞ்சிபுரம் - உத்திரமேரூர் ஊராட்சி ஒன்றியத்தை பிரித்து சாலவாக்கம் ஊராட்சி ஒன்றியம்
- விழுப்புரம் - வானூர் ஊராட்சி ஒன்றியத்தைப் பிரித்து கிளியனூர் ஊராட்சி ஒன்றியம்
- திருவண்ணாமலை - தெள்ளார் மற்றும் பெரணமல்லூர் ஊராட்சி ஒன்றியத்தை பிரித்து மழையூர் ஊராட்சி ஒன்றியம்
- கிருஷ்ணகிரி - தளி மற்றும் கெலமங்கலம் ஊராட்சி ஒன்றியத்தை பிரித்து அஞ்செட்டி ஊராட்சி ஒன்றியம்
- ராமநாதபுரம் மாவட்டத்தில் கடலாடி மற்றும் கமுதி ஊராட்சி ஒன்றியத்தை பிரித்துச் சாயல்குடி ஊராட்சி ஒன்றியம்
- விழுப்புரம் மாவட்டத்தில் விக்கிரவாண்டி மற்றும் கானை ஊராட்சி ஒன்றியத்தை பிரித்து கஞ்சனூர் ஊராட்சி ஒன்றியம் உருவாக்கம்.
ஆகிய ஏழு புதிய ஊராட்சி ஒன்றியங்கள் உருவாக்கப்பட்டதன் மூலம், அந்தந்தப் பகுதிகளில் உள்ள கிராமங்கள் மற்றும் மக்கள் நலத் திட்டங்கள் மேலும் துரிதப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப் புதிய நிர்வாக அமைப்புகள் உடனடியாக நடைமுறைக்கு வருகின்றன.
இதையும் படிங்க: நெஞ்சே பதறுதே..!! வக்கிரத்தின் உச்சம்... அந்தரங்க உறுப்பில் இரும்பு கம்பி... 7 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்...!