தமிழ்நாட்டில் திரைப்படம், இணையத் தொடர்கள் (வெப் சீரிஸ்) மற்றும் இதர பொழுதுபோக்கு உள்ளடக்கங்களை (கண்டென்ட்களை) உருவாக்குவதற்காக, தமிழக அரசுடன் இணைந்து பணியாற்ற ஜியோ ஹாட்ஸ்டார் (Jio Hotsar) நிறுவனம் ஒரு மிகப் பெரிய புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. இந்த ஒப்பந்தத்தின் மொத்த மதிப்பு ரூ.4,000 கோடி எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசு மற்றும் ஜியோ ஹாட்ஸ்டார் இடையே கையெழுத்தான இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம், தமிழ்நாட்டின் பொழுதுபோக்கு மற்றும் டிஜிட்டல் ஊடகத் துறையில் ஒரு முக்கிய முதலீடாகக் கருதப்படுகிறது.
இந்த ஒப்பந்தத்தின் மூலம், தமிழக அரசின் வழிகாட்டுதலுடனும் ஒத்துழைப்புடனும் ஜியோ ஹாட்ஸ்டார் நிறுவனம் பல்வேறு புதிய திரைப்படங்கள், இணையத் தொடர்கள் மற்றும் பிற டிஜிட்டல் உள்ளடக்கங்களை இணைந்து உருவாக்க உள்ளது.
இதையும் படிங்க: 8 வாரத்திற்குப் பிறகே ஓ.டி.டி. ரிலீஸ்: மீறினால் திரையிடத் தடை! - திருப்பூர் சுப்ரமணியன் அறிவிப்பு!
ரூ.4,000 கோடி மதிப்பிலான இந்த முதலீடு, மாநிலத்தில் உள்ள திரைப்படத் துறைக்கு ஒரு பெரிய ஊக்கத்தை அளிப்பதுடன், ஆயிரக்கணக்கான கலைஞர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள் மற்றும் ஊழியர்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழகத்தின் கலை மற்றும் கலாச்சாரத் தளத்தை உலக அரங்கிற்குக் கொண்டு செல்வதிலும், மாநிலத்தின் உள்ளூர் கதைகளை டிஜிட்டல் தளத்தில் பிரபலப்படுத்துவதிலும் இந்த ஒப்பந்தம் முக்கியப் பங்கு வகிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: தேர்தலுக்குப் பிறகுதான் தெரியும்! தி.மு.க கூட்டணி கட்சிகள் உடையும்! புரட்சி பாரதம் கட்சித் தலைவர் ஜெகன் பேட்டி!