ஜனவரி 20ஆம் தேதி சட்டப்பேரவை கூட்டத்தொடர் ஆளுநர் உரையுடன் தொடங்கும் என சபாநாயகர் அப்பாவு அறிவித்துள்ளார். 2026 ஆம் ஆண்டுக்கான முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் ஜனவரி 20ஆம் தேதி காலை 9:30 மணிக்கு தொடங்கும் என அறிவித்துள்ளார். ஜனவரி 20ஆம் தேதியே அலுவல் ஆய்வு குழு கூட்டம் நடத்தப்படும் என்றும் சபாநாயகர் அப்பாவு அறிவித்துள்ளார்.
நாங்கள் எந்த மரபையும் மாற்ற மாட்டோம் என்றும் ஆளுநர் சட்டப்பேரவையின் மாண்பை காப்பாற்றுவார் என்று நம்புவதாகவும் சபாநாயகர் தெரிவித்தார். ஒரு ஆண்டில் பொதுவாக மூன்று அல்லது நான்கு கூட்டத்தொடர்கள் நடைபெறும்.தமிழகத்தில் கூட்டத்தொடர்கள் பல வகைகளில் நடைபெறுகின்றன. ஆண்டின் முதல் கூட்டத்தொடர் பொதுவாக ஆளுநரின் உரையுடன் தொடங்கும். இதில் ஆளுநர் அரசின் கொள்கைகள் மற்றும் திட்டங்களை விவரிப்பார். இது ஒரு வழக்கமான நடைமுறையாகும்.

ஏனெனில் புத்தாண்டின் தொடக்கத்தில் அரசின் திட்டங்களை அவைக்கு அறிமுகப்படுத்துவது அவசியம். பட்ஜெட் கூட்டத்தொடர் எனப்படும் மற்றொரு முக்கியமான தொடர், பிப்ரவரி அல்லது மார்ச் மாதங்களில் நடைபெறும். ஜனவரி 20ஆம் தேதி சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்கும் நிலையில் ஜனவரி 6 ஆம் தேதி தமிழக அமைச்சரவை கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.
இதையும் படிங்க: கைத்தறி, கதர் துறை சார்பில் விருதுகள்... விருதாளர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் பாராட்டு...!
அதன்படி சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் கூடியது. சட்டப்பேரவையில் விவாதிக்கப்பட வேண்டிய முக்கிய விவகாரங்கள் குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் ஆலோசனை நடத்துவார் என்று கூறப்பட்டுள்ளது. மேலும், புதிய தொழில் முதலீடுகளை ஈர்ப்பது தொடர்பாகவும் முதலமைச்சர் ஸ்டாலின் தலைவையில் கூடி ஆலோசிக்க உள்ளதாக கூறப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: பெருகும் புலம்பெயர்ந்தோர் மீதான தாக்குதல்... இதுதான் தலைகுனிய விடாத லட்சணமா? சாடிய நயினார் நாகேந்திரன்...!