தமிழ்நாடு அரசு, கைத்தறி நெசவாளர்களின் பாரம்பரியத் திறனையும், கடற்கரை சார்ந்த மீனவர்களின் வாழ்வாதாரத்தையும் ஊக்குவிப்பதற்காக பல்வேறு திட்டங்களையும் நலத்திட்டங்களையும் செயல்படுத்தி வருகிறது. இவற்றில் ஆண்டுதோறும் வழங்கப்படும் விருதுகளும் முக்கிய இடம் வகிக்கின்றன.
கைத்தறி துறையில் நெசவாளர்களின் புதுமையான வடிவமைப்புகளையும், சிறந்த பங்களிப்பையும் அங்கீகரிக்கும் வகையில் சில விருது திட்டங்கள் உள்ளன, அதேநேரம் கடற்கரை சார்ந்த மீனவ சமூகத்திற்கு நேரடியாக ஆண்டுதோறும் விருதுகள் வழங்கப்படும் திட்டங்கள் குறைவாகவே காணப்படுகின்றன. இருப்பினும், அரசின் நலத்திட்டங்கள் மூலம் மீனவர்களுக்கு பல உதவிகள் வழங்கப்படுகின்றன.கைத்தறி துறையைப் பொறுத்தவரை, தமிழ்நாடு கைத்திறத் தொழில்கள் வளர்ச்சிக் கழகம் மூலம் ஆண்டுதோறும் கைவினைஞர்களுக்கு பல விருதுகள் வழங்கப்படுகின்றன.
இவை கைத்தறி மற்றும் கைவினைப் பொருட்களின் வளர்ச்சிக்கு பெரிதும் உதவுகின்றன. உயரிய விருது ஆண்டுதோறும் தமிழ்நாட்டின் கைவினைத் துறை வளர்ச்சிக்கு பங்களித்த சிறந்த கைவினைஞர்களுக்கு வழங்கப்படுகிறது. அதனை முதலமைச்சர் ஸ்டாலின் வழங்கி கௌரவித்து வருகிறார். கைத்தறி துறையில் வளர்ச்சியை கொண்டு வரும் நோக்கில் இது போன்ற விருது வழங்கும் நிகழ்வுகள் முன்னெடுக்கப்படுகின்றன.
இதையும் படிங்க: நாங்க பாவமில்லையா? மயானத்தில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்திய தூய்மை பணியாளர்கள்...!
இதனிடையே கைத்தறி மற்றும் கதர் துறை சார்பில் தேர்வான 13 பேருக்கு சென்னை தலைமைச் செயலகத்தில் விருதுகள் வழங்கி முதல்வர் ஸ்டாலின் கௌரவித்தார். மேலும் காசோலைகளையும் வழங்கினார். மொத்தம் 13 விருதாலர்களுக்கு 23 லட்சத்து 75 ஆயிரம் ரூபாய்க்கான காசோலைகள் வழங்கப்பட்டன. எட்டு சிறந்த நெசவாளர் விருதாளர்களுக்கு ரூபாய் இருபது லட்சமும், இரண்டு சிறந்த வடிவமைப்பாளர் விருதாளருக்கு ஒரு லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டது. சிறந்த இளம் வடிவமைப்பாளர்கள் விரதத்திற்கு மூன்று பேர் தேர்வு செய்யப்பட்ட நிலையில் அவர்களுக்கு இரண்டு லட்சத்து 25 ஆயிரம் ரூபாய்க்கான காசோலை வழங்கப்பட்டது.
இதையும் படிங்க: போலீசார் இரும்பு கரத்தையும், அன்புக்கரத்தையும் காட்ட வேண்டும்... பணி நியமன ஆணைகளை வழங்கி முதல்வர் அறிவுரை..!