• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, October 05, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    5 மாவட்டங்களில் இன்றும் நாளையும் கனமழை வெளுத்து வாங்கும்! சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

    நீலகிரி கோவை தேனி கிருஷ்ணகிரி தர்மபுரி ஆகிய 5 மாவட்டங்களில் இன்றும் நாளையும் கனமழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
    Author By Thenmozhi Kumar Mon, 05 Oct 2026 15:28:30 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Tamil Nadu Weather: Heavy Rain Alert for Nilgiris, Coimbatore & 3 Other Districts Today and Tomorrow.

    குமரிக்கடல் பகுதியிலிருந்து தமிழகம் வழியாக வடக்கு உள் கர்நாடகா வரை நிலவும் வளிமண்டலக் காற்றழுத்தத் தாழ்வுப் பாதை காரணமாக, நீலகிரி, கோயம்புத்தூர் உள்ளிட்ட 5 மாவட்டங்களில் இன்றும் நாளையும் பலத்த காற்றுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளதாகச் சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் அதிகாரப்பூர்வ எச்சரிக்கை விடுத்துள்ளது.

    சென்னை மண்டல வானிலை ஆய்வு மையத்தின் தென்மண்டலத் தலைவர் சார்பில் விஞ்ஞானி முனைவர் வி.ஆர். துரை இன்று (05-10-2026) வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, சுமார் 0.9 கி.மீ உயரத்தில் குமரிக்கடல் பகுதிகளிலிருந்து வடக்கு உள் கர்நாடகாவின் மேல் நிலவும் வளிமண்டல சுழற்சி வரை, தமிழகம் மற்றும் தெற்கு உள் கர்நாடகா வழியாக ஒரு காற்றழுத்தத் தாழ்வுப் பாதை நீடித்து வருகிறது.

    இதன் காரணமாக, இன்று (05-10-2026) மற்றும் நாளை (06-10-2026) ஆகிய இரண்டு தினங்களுக்குக் கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப் பகுதிகள் மற்றும் நீலகிரி, தேனி, கிருஷ்ணகிரி, தர்மபுரி ஆகிய 5 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னல் மற்றும் மணிக்கு 40 முதல் 50 கி.மீ வேகத்தில் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும்.

    இதையும் படிங்க: தமிழகத்தில் 15 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கனமழை! வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

    அதேபோல் திருப்பூர், ஈரோடு, சேலம், நாமக்கல், திருப்பத்தூர், வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், கரூர், திருச்சி, அரியலூர், பெரம்பலூர், தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய 27 மாவட்டங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் பலத்த காற்றுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

    heavy rain

    தொடர்ந்து வரும் அக்டோபர் 7, 8 மற்றும் 9 ஆகிய தேதிகளில் மேற்குத் தொடர்ச்சி மலை மாவட்டங்கள், டெல்டா பகுதிகள், தென் மாவட்டங்கள் மற்றும் வட உள் மாவட்டங்களில் பலத்த காற்றுடன் கூடிய மிதமான மழை தொடரும் என்றும், அக்டோபர் 10 மற்றும் 11 தேதிகளில் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளைப் பொறுத்தவரை, அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், மாலை அல்லது இரவு நேரங்களில் நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. நகரில் அதிகபட்ச வெப்பநிலை 35 முதல் 36 டிகிரி செல்சியஸாகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 26 முதல் 27 டிகிரி செல்சியஸாகவும் பதிவாக வாய்ப்புள்ளது.

    கடந்த 24 மணி நேரத்தில் நீலகிரி மாவட்டம் அழகரை எஸ்டேட் மற்றும் கோத்தகிரியில் தலா 12 செ.மீ மிகக் கனமழை பதிவாகியுள்ளது. மேலும் எடப்பள்ளி, குன்னூரில் தலா 8 செ.மீ மழையும், தேவாரத்தில் 7 செ.மீ மழையும், பில்லூர் அணையில் 5 செ.மீ மழையும் பதிவாகியுள்ளது. சமவெளிப் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலையாக ஈரோட்டில் 37.6 டிகிரி செல்சியஸும், குறைந்தபட்ச வெப்பநிலையாகத் தர்மபுரியில் 23.0 டிகிரி செல்சியஸும் பதிவாகியுள்ளது.

    மீனவர்களுக்கான எச்சரிக்கையைப் பொறுத்தவரை, இன்று கேரளா-கர்நாடக கடலோரப் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு-மத்தியகிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் மணிக்கு 35 முதல் 45 கி.மீ வேகத்திலும், இடையிடையே 55 கி.மீ வேகத்திலும் சூறாவளிக் காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் இப்பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதேசமயம் தமிழகக் கடலோரப் பகுதிகள் மற்றும் வங்கக்கடல் பகுதிகளுக்கு எவ்வித எச்சரிக்கையும் விடுக்கப்படவில்லை.

    இதையும் படிங்க: உஷார் மக்களே..! தீவிரமாகும் காற்றழுத்த தாழ்வு மண்டலம்... மிக கனமழை எச்சரிக்கை.!!

    மேலும் படிங்க
    வணிகர்களுக்கு செம ஜாக்பாட்! GST 2.0-வில் வரப்போகும் முக்கிய மாற்றம்! தளர்கிறதா கட்டுப்பாடுகள்?

    வணிகர்களுக்கு செம ஜாக்பாட்! GST 2.0-வில் வரப்போகும் முக்கிய மாற்றம்! தளர்கிறதா கட்டுப்பாடுகள்?

    அரசியல்
    தவெகவினர் செயலால் வந்த வினை... பள்ளிக் கல்வித்துறைக்கு நீதிமன்றம் பிறப்பித்த அதிரடி உத்தரவு...!

    தவெகவினர் செயலால் வந்த வினை... பள்ளிக் கல்வித்துறைக்கு நீதிமன்றம் பிறப்பித்த அதிரடி உத்தரவு...!

    அரசியல்
    மருத்துவ நோபல் பரிசு அறிவிப்பு! 3 பேருக்கு உயரிய விருது!

    மருத்துவ நோபல் பரிசு அறிவிப்பு! 3 பேருக்கு உயரிய விருது!

    உலகம்
    சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்குது CM..! உயிரை கையில் பிடித்துக் கொண்டிருக்கும் அவலம்.. வானதி சீனிவாசன் தாக்கு..!!

    சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்குது CM..! உயிரை கையில் பிடித்துக் கொண்டிருக்கும் அவலம்.. வானதி சீனிவாசன் தாக்கு..!!

    தமிழ்நாடு
    களைகட்டும் குலசை முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா.. 11-ந் தேதி கொடியேற்றத்துடன் கோலாகல தொடக்கம்!!

    களைகட்டும் குலசை முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா.. 11-ந் தேதி கொடியேற்றத்துடன் கோலாகல தொடக்கம்!!

    பக்தி
    ஸ்டைலிஷ் லுக்கில் அதிதி ராவ்..!! இணையத்தை கலக்கும் லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படங்கள்..!

    ஸ்டைலிஷ் லுக்கில் அதிதி ராவ்..!! இணையத்தை கலக்கும் லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படங்கள்..!

    சினிமா

    செய்திகள்

    வணிகர்களுக்கு செம ஜாக்பாட்! GST 2.0-வில் வரப்போகும் முக்கிய மாற்றம்! தளர்கிறதா கட்டுப்பாடுகள்?

    வணிகர்களுக்கு செம ஜாக்பாட்! GST 2.0-வில் வரப்போகும் முக்கிய மாற்றம்! தளர்கிறதா கட்டுப்பாடுகள்?

    அரசியல்
    தவெகவினர் செயலால் வந்த வினை... பள்ளிக் கல்வித்துறைக்கு நீதிமன்றம் பிறப்பித்த அதிரடி உத்தரவு...!

    தவெகவினர் செயலால் வந்த வினை... பள்ளிக் கல்வித்துறைக்கு நீதிமன்றம் பிறப்பித்த அதிரடி உத்தரவு...!

    அரசியல்
    மருத்துவ நோபல் பரிசு அறிவிப்பு! 3 பேருக்கு உயரிய விருது!

    மருத்துவ நோபல் பரிசு அறிவிப்பு! 3 பேருக்கு உயரிய விருது!

    உலகம்
    சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்குது CM..! உயிரை கையில் பிடித்துக் கொண்டிருக்கும் அவலம்.. வானதி சீனிவாசன் தாக்கு..!!

    சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்குது CM..! உயிரை கையில் பிடித்துக் கொண்டிருக்கும் அவலம்.. வானதி சீனிவாசன் தாக்கு..!!

    தமிழ்நாடு
    ரூ.1 கோடி நஷ்ட ஈடு..? தவெக அமைச்சர்களுக்கு செக்... வழக்கு தொடர திமுகவுக்கு கிரீன் சிக்னல்..!!

    ரூ.1 கோடி நஷ்ட ஈடு..? தவெக அமைச்சர்களுக்கு செக்... வழக்கு தொடர திமுகவுக்கு கிரீன் சிக்னல்..!!

    தமிழ்நாடு
    குறைந்த விலைக்கு துவரம் பருப்பு கொள்முதல்... திமுகவே  காரணம்... அடித்துச் சொல்லும் உதயநிதி..!!

    குறைந்த விலைக்கு துவரம் பருப்பு கொள்முதல்... திமுகவே காரணம்... அடித்துச் சொல்லும் உதயநிதி..!!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share