தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகி நிர்மல் குமார் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் பாஜகவுடன் கூட்டணி இல்லை என திட்டவட்டமாக கூறி இருந்தார். இது தொடர்பாக செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த தமிழிசை சௌந்தரராஜன் பாஜகவுடன் கூட்டணி இல்லை என்பது குறித்து தமிழக வெற்றி கழகத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை என தெரிவித்தார்.

கட்சியின் தலைவர் விஜய் இதுவரை இதனை அறிவிக்கவில்லை என்றும் திமுக ஆட்சி அகற்றப்பட வேண்டும் என எண்ணுபவர்கள் அனைவரும் ஒன்றிணைைய வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.
இதையும் படிங்க: முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை தினம்.. த.வெ.க அனுசரிப்பு.. மாவட்டச் செயலாளர்களுக்கு பறந்த உத்தரவு..!

திமுக ஆட்சி அப்புறப்படுத்தப்பட வேண்டிய ஒன்று என்றும் கூட்டணி குறித்து பாஜக தலைமை முடிவெடுக்கும் எனவும் தெரிவித்தார். யார் யாரோ கூறும் கருத்துக்களுக்கெல்லாம் பதில் கூற முடியாது என்றும் தமிழிசை சௌந்தரராஜன் திட்டபட்டமாக தெரிவித்தார்.
இதையும் படிங்க: #BREAKING: தவெக +தேமுதிக +பாமக மெகா கூட்டணி? விஜயின் தேர்தல் கணக்கு..!