2026-27 ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் முக்கிய கூட்டத்தொடர், தமிழக வெற்றிக் கழக அரசின் முதல் முழுமையான நிதிநிலை அறிக்கையை முன்வைக்கும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வாக அமைந்தது.சென்னையில் உள்ள சட்டப்பேரவை வளாகத்தில் காலை 10 மணிக்கு கூட்டத்தொடர் தொடங்கி நடைபெற்றது.
நிதியமைச்சர் என். மரிய வில்சன் 2026-27 ஆம் ஆண்டுக்கான மாநில பட்ஜெட்டை சபையில் தாக்கல் செய்து உரை நிகழ்த்தினார். அப்போது பல்வேறு துறைகளுக்கு பட்ஜெட் ஒதுக்கீடு தொடர்பாக அறிவிக்கப்பட்டது. மேலும் முக்கிய திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடு விவரங்களும் அறிவிக்கப்பட்டன. முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் தலைமையிலான இந்த அரசு மே மாதம் பதவியேற்ற பிறகு முன்வைத்த முதல் முழு பட்ஜெட் இதுவாகும்.

நேற்றைய தினம் வரை அமைச்சர்கள் மற்றும் சட்டப்பேரவை உறுப்பினர்கள் ஆலோசனைக் கூட்டங்களில் பங்கேற்று பட்ஜெட் அறிவிப்புகள் மற்றும் சபை நடைமுறைகள் குறித்து விரிவாக விவாதித்தனர்.இந்த கூட்டத்தொடர் அரசியல் பரபரப்புடன் தொடங்கி நடைபெற்றது. இந்த நிலையில், மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பட்ஜெட் அந்த எதிர்பார்ப்பிற்கு ஏமாற்றத்தையே அளித்திருக்கிறது என பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: என்னது WASTE- ஆ..? திமுக நடத்தியதே உதார் ஆட்சி..!! வெளுத்துவிட்ட தவெக..!!
வெற்றிக் கழகம் சமர்ப்பித்த வெற்று பட்ஜெட் என்று தெரிவித்தார். முதலமைச்சர் தலைமை சாதாரண மக்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யப்பட வேண்டும் என வலியுறுத்தி உள்ளார். மேலும், மத்திய அரசின் நலத்திட்டங்களை புறந்தள்ள கூடாது என கூறினார். PM-Shri நவோதயா பள்ளி, விஸ்வகர்மா திட்டம் போன்ற திட்டங்கள் நடைமுறைப்படுத்த வேண்டும் என்றார்.
இதையும் படிங்க: மாற்றமா.? கடனுக்கு வழியா..? கேள்விக்குறியான பட்ஜெட்..! வேல்முருகன் சரமாரி கேள்வி.!!