இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையேயான கடல் எல்லை, சர்வதேச கடல் எல்லைக் கோடு (International Maritime Boundary Line - IMBL) மூலம் வரையறுக்கப்பட்டுள்ளது. இந்த எல்லை பாக் நீரிணை மற்றும் மன்னார் வளைகுடாவில் வெறும் 12 கடல் மைல்கள் தொலைவில் உள்ளது.
இந்தப் பகுதி மீன்வளம் மிக்கது என்பதால், தமிழகத்தைச் சேர்ந்த மீனவர்கள், குறிப்பாக ராமநாதபுரம், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, மயிலாடுதுறை, கன்னியாகுமரி போன்ற கடலோர மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் இங்கு மீன்பிடிக்கச் செல்கின்றனர்.
ஆனால், கடல் எல்லையைத் தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி இலங்கை கடற்படை மீனவர்களை கைது செய்கிறது, அவர்களின் படகுகளையும் மீன்பிடி உபகரணங்களையும் பறிமுதல் செய்கிறது.கடந்த பத்து ஆண்டுகளில் (2014-2024), 3,288 தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதையும் படிங்க: சேஃப்டி ஃபர்ஸ்ட்! கூடுதல் தோழி விடுதிகள்.. டெண்டர் கோரிய தமிழக அரசு..!
2024 ஆம் ஆண்டு மட்டும் ஜூலை வரை 268 மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், 365 படகுகள் இலங்கை அரசால் நாட்டுடைமையாக்கப்பட்டு, 67 படகுகள் ஏலம் விடப்பட உள்ளன.

தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்யும் சம்பவங்கள் கடந்த நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாகத் தொடர்ந்து நிகழ்ந்து வரும் ஒரு சிக்கலான பிரச்சினையாக உள்ளது. இந்தியா மற்றும் இலங்கை இடையேயான கடல் எல்லையான பாக் நீரிணை மற்றும் மன்னார் வளைகுடாவில் மீன்பிடிக்கச் செல்லும் தமிழக மீனவர்கள், எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி இலங்கை கடற்படையால் கைது செய்யப்படுவது வழக்கமாகி உள்ளது.
இது மீனவர்களின் வாழ்வாதாரத்தைப் பெருமளவில் பாதிப்பதுடன், இரு நாடுகளுக்கிடையேயான இராஜதந்திர உறவுகளிலும் பதற்றத்தை ஏற்படுத்தி வருகிறது.
தமிழக மீனவர்கள் கைது செய்ய ப்படும் சம்பவங்கள் தொடர்ந்து வரும் நிலையில் இருநாட்டினரும் கலந்து பேசி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வலுத்து வருகிறது.
இந்த நிலையில்,எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கோரி ராமேஸ்வரம் மீனவர்கள் ஒன்பது பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது.
புத்தளம் கல்பெட்டி பகுதியில் மீன் பிடித்த ராமேஸ்வரத்தைச் சேர்ந்த நாட்டுப்புற மீனவர்கள் ஒன்பது பேரை கைது செய்துள்ளனர். இதேபோல் கச்சத்தீவு பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்கள் ஐந்து பேரை இலங்கை கடற்படை பயிற்சி செய்துள்ளது. ஒரே நாளில் 14 தமிழ்நாட்டு மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க: மணல் தட்டுப்பாட்டை போக்க.. கரூரில் புதிதாக 2 மணல் குவாரி.. தமிழக அரசு விண்ணப்பம்..!!