அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி 2026 சட்டமன்ற தேர்தல் முன்னிட்டு தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். பல்வேறு தரப்பு மக்களை சந்தித்து கலந்துரையாடும் அவர், மக்கள் மத்தியில் உரையாற்றுவார். இந்த நிலையில், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியின் பிரச்சாரத்தின் போது ஆளில்லாத ஆம்புலன்ஸ் வந்ததால் ஆத்திரமடைந்த இபிஎஸ், மிரட்டல் விடுக்கும் தொனியில் பேசியது சர்ச்சையை கிளப்பி உள்ளது.
இனி கூட்டத்திற்குள் ஆம்புலன்ஸ் வந்தால், அதை ஓட்டிட்டு வர்ற ட்ரைவரே அதில் பேஷண்டாகப் போகிற நிலைமை வரும் என்று பழனிச்சாமி பேசி உள்ளார். அது மட்டும் இல்லாமல் அந்த வாகனத்தின் நம்பரை குறித்து வைத்துக் கொள்ளுங்கள் என்றும் எப்போது தனது பிரச்சாரம் நடந்தாலும் அங்கு ஆம்புலன்ஸ் வருவதாகவும் கூறியிருந்தார். ஆளுங்கட்சியை கடுமையாக சாடி பேசிய எடப்பாடி பழனிச்சாமி ஆம்புலன்ஸ் ஓட்டுனருக்கு மிரட்டல் விடுத்த சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் திருச்சி மாவட்டம் துறையூரில் அதிமுகவினர் ஆம்புலன்ஸை தடுத்து நிறுத்தி ஓட்டுநரை தாக்கியதாக கூறப்படும் சம்பவத்திற்கு கண்டனம் எழுந்துள்ளது. இதனிடையே, 108 ஆம்புலன்ஸ் நோயாளிகளை அழைக்கச் செல்லும்போது சைரன் சப்தத்துடனே செல்லும் என்றும் அதனால் வெறும் ஆம்புலன்ஸ் செல்கின்றது என்று நினைக்க வேண்டாம் எனவும் 108 ஆம்புலன்ஸ் மற்றும் பணியாளர்களை தாக்கினால் வன்முறை தடுப்பு மற்றும் உடைமைகள் சேதார தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதையும் படிங்க: திமுகவிடம் பணம் வாங்கிய கூட்டணி கட்சிகள்!! லிஸ்ட் போட்டு மாட்டிவிட்ட முத்தரசன்!! சங்கடத்தில் உ.பிக்கள்!!
தாக்கும் நபர்கள் மீது மருத்துவ பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் 3 முதல் 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனை கிடைக்க வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதையும் படிங்க: அமித் ஷாவுக்கு பதிலடி கொடுத்த எடப்பாடி... பாஜக தலைமைக்கு பேரதிர்ச்சி...!