தொழில்நுட்ப திறனில் சிறந்த மாநிலமாக தமிழ்நாட்டை உருவாக்கும் வகையில் 2025 – 26 நிதிநிலை அறிக்கையில், அடுத்த இரண்டு ஆண்டுகளில் கல்லூரி மாணவர்களுக்கு 20 லட்சம் மடிக்கணினி வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
இத்திட்டத்தை செயல்படுத்த அரசு உயர் அலுவலர்கள், அண்ணா பல்கலைக்கழகம், ஐஐடி மெட்ராஸ், மத்திய அரசின் தேசிய தகவலியல் நிறுவனம், தமிழ்நாடு மின் ஆளுமை முகமை, தமிழ்நாடு மின்னணு நிறுவனம் உள்ளிட்டவற்றின் தொழில்நுட்ப வல்லுநர்கள் இடம் பெற்றுள்ள தொழில்நுட்ப தரநிலைக் குழு அமைக்கப்பட்டது.

தொழில்நுட்ப தரநிலைக் குழுவினர் இதுவரை 7 கூட்டங்கள் நடத்தி இத்திட்டத்தின் கீழ் வழங்கப்பட உள்ள மடிக்கணினியின் செயல்திறன், நினைவகத்தின் அளவு , மென்பொருள், மின்கலத்தின் (பேட்டரி) திறன், வன்பொருட்கள் உள்ளிட்ட தொழில்நுட்பச் சாதனங்களுக்கான விவரக்குறிப்புகள் வரையறுக்கப்பட்டுள்ளன. இதனிடையே, கடந்த மே 19-ஆம் தேதி துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் கல்லூரி மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கும் பணி குறித்த உயர் நிலைக்குழுவின் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தின் போது மடிக்கணினி வழங்கும் திட்டத்தில் இதுவரை எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து உதயநிதி ஸ்டாலின் அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.
இதையும் படிங்க: டெல்லி சென்றடைந்தார் முதல்வர் ஸ்டாலின்..! மேளதாளம் முழங்க MASS வரவேற்பு..!

20 லட்சம் மடிக்கணினிகளை கொள்முதல் செய்ய தமிழ்நாடு அரசு டெண்டர் கோரியிருக்கிறது. 2025-26 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிவிப்பன்படி கல்லூரி மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்க டெண்டர் கோரப்பட்டுள்ளது. 20 லட்சம் மடிக்கணினிகளை கொள்முதல் செய்ய சர்வதேச டெண்டர் கோரியுள்ளது தமிழ்நாடு அரசின் எல்காத் நிறுவனம். அதில் என்னென்ன மாதிரியான சிறப்பம்சங்களுடன் லேப்டாப் இருக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

8 ஜிபி ரேம், 265 GB எஸ்.எஸ்.டி கொண்ட ஹார்ட் டிஸ்க், 14 அல்லது 15.6 இன்ச் செயல் திறன் கொண்ட ஸ்கிரீன் ஆகிய பல்வேறு வசதிகளை கொண்டதாக இருக்க வேண்டும் எனக்கூறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் விண்டோஸ் 11 ஆபரேட்டிங் சிஸ்டம் மற்றும் லேப்டாப்பிற்கு ஓராண்டு ஓராண்டு வாரண்டி வழங்கப்படவுள்ளது. இன்னும் ஆறு மாதத்திற்குள் மடிக்கணினியானது கொள்முதல் செய்யப்பட்டு மாணவர்களுக்கு வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: ரொம்ப நெருக்கடி கொடுக்குறாங்க.. ராஜினாமா பண்ணப்போறேன்.. வங்கதேசத்தில் மீண்டும் கவிழும் ஆட்சி..!