ஜம்மு காஷ்மீர் பகுதியில் உள்ள தமிழக மாணவர்கள் பாதுகாப்பாக தமிழ்நாடு திரும்ப நடவடிக்கை எடுக்க முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார். நேற்று முதல் ஜம்மு காஷ்மீர் பகுதியில் பாகிஸ்தான் ட்ரோன் தாக்குதல் நடத்தியதால் பதட்டமான சூழ்நிலை நிலவுகிறது. இதற்கு இந்தியா சார்பில் தக்க பதிலடி கொடுக்கப்பட்டு வந்தாலும் அங்கு சீரற்ற சூழ்நிலையே நிலவுகிறது. எல்லையோர மாவட்டங்களில் முழுவதுமாக மின்சாரம் துண்டிக்கப்பட்டது.

பாதுகாப்பு சைரன் ஒலிக்கப்பட்டத்துடன் அங்குள்ள மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டனர். இதன் காரணமாக ஜம்முவில் இருந்து மாணவர்கள், மக்கள் உள்ளிட்டோர் வெளியேறி வருகின்றனர். இந்த நிலையில் முதலமைச்சரை உத்தரவுப்படி நிலைமை சற்று சீரானதும் தமிழக மாணவர்களை அழைத்து வர உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அயலக தமிழர் நல வாரியம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: இந்தியாவை தொட்ட... நீ கெட்ட! பாகிஸ்தானுக்கு பகிரங்க எச்சரிக்கை...

ஜம்மு காஷ்மீரில் சிக்கியுள்ள தமிழக மாணவர்கள் அயலக தமிழர் நல வாரியத்தை தொடர்பு கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. காஷ்மீரில் உள்ள தமிழக மாணவர்கள் தொடர்பு கொள்ள உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. உதவி தேவைப்படும் மாணவர்கள் 9994433456, 7373026456 என்ற எண்களுக்கு தொடர்பு கொள்ளலாம் என்று கூறப்பட்டுள்ளது. மேலும், உதவி தேவைப்படும் தமிழக மாணவர்கள் j nrtwb.chairman@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு தொடர்பு தொடர்பு கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: அத்துமீறிய பாகிஸ்தான்! அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து பிரதமர் அவசர ஆலோசனை...