தஞ்சாவூரில் திமுக சார்பில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பனகல் கட்டிடம் அருகே நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் காவிரி டெல்டா மாவட்டங்களைச் சேர்ந்த கட்சி நிர்வாகிகள், சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள், இளைஞர் அணி உள்ளிட்ட துணை அமைப்புகளின் உறுப்பினர்கள் மற்றும் விவசாயச் சங்கங்களைச் சேர்ந்தவர்கள் பெருமளவில் கலந்துகொண்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், முதல்வர் விஜய், நடிகை குறித்து பேசியதாக கூறி இன்று கைது செய்யப்பட்டார். இதனால் தமிழகம் முழுவதும் திமுகவினர் கொந்தளித்து உள்ளனர். இந்த நிலையில், பட்ஜெட் கூட்டத்தொடரில் உதயநிதியின் கேள்விக்கணைகளை சந்திக்க முடியாத அச்சத்தில், உயர்நீதிமன்றத்தின் அறிவுறுத்தலையும் மீறி காவல்துறையை வைத்து கைது செய்த விஜயின் காட்டுமிராண்டி செயலை வன்மையாக கண்டிக்கிறேன் என முன்னாள் சபாநாயகர் அப்பாவு தெரிவித்தார்.

உதயநிதியை காவல்துறை வேனில் ஏற்றி அழைத்துச் சென்றபோது அவருக்கு ஆதரவாக குரல் எழுப்பிய திமுக தொண்டர்கள் மீது தடியடி நடத்தியும் கைது செய்தும் அராஜகத்தில் ஈடுபட்ட காவல்துறையினரையும் வன்மையாக கண்டிப்பதாக தெரிவித்தார்.
இதையும் படிங்க: திமுக துணைப் பொதுச்செயலாளர் பதவி! அப்பாவு முன்னிலை?! அப்செட்டில் அனிதா ராதாகிருஷ்ணன்! கனிமொழி-உதயநிதி முடிவு?
உதயநிதியை எங்கே கொண்டு செல்கிறார்கள் என்று யாருக்கும் சொல்லாமல் அவரை தனிமைப்படுத்தி அழைத்து செல்வது அவர் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டு விடுமோ என்ற அச்சத்தை தமிழக மக்கள் மத்தியில் ஏற்படுத்துகிறது என கூறியுள்ளார். ஆகவே உயர்நீதிமன்ற நீதியரசர்கள் தலையிட்டு எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதியை இந்த "கோமாளி " அரசிடமிருந்து காப்பாற்றித் தர வேண்டும் என்று விமர்சித்தார்.
இதையும் படிங்க: "RSS அரைக்கால் டவுசர் அமைச்சருக்கு மிரட்டல்"... நல்ல நடிப்பு CM சார்..! அப்பாவு காட்டம்..!!