தமிழகத்தில் தமிழக வெற்றிக் கழக தலைவர் ஜோசப் விஜய் முதலமைச்சராகப் பொறுப்பேற்ற பிறகு, டாஸ்மாக் மதுக்கடைகளில் நடைபெற்று வந்த பாட்டிலுக்கு கூடுதலாக ரூ.10 வசூல் செய்யும் நடைமுறையை உடனடியாக நிறுத்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. திமுக ஆட்சியில் இந்தக் கூடுதல் தொகை வசூல் பெரும் விமர்சனத்துக்கு உள்ளான நிலையில், விஜய்யின் தேர்தல் பிரசாரத்தின் முக்கிய அம்சமாக இது இருந்தது.
கரூர் பொதுக்கூட்டத்தில் “பாட்டிலுக்கு 10 ரூபா” எனப் பாடிய விஜய்யின் வரிகள் வைரலாகி, மக்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தன.டாஸ்மாக் கடைகளில் மது பாட்டில்களை வாங்கும்போது MRP விலைக்கு மேல் ரூ.10 கூடுதலாக வசூலிக்கப்படும் நடைமுறை திமுக ஆட்சியில் அறிமுகப்படுத்தப்பட்டது.

இது முதலில் காலி பாட்டில்களை திருப்பி ஒப்படைக்கும் போது ரீஃபண்ட் தரும் டெபாசிட் திட்டமாகக் கூறப்பட்டாலும், நடைமுறையில் பெரும்பாலான இடங்களில் இந்தத் தொகை திரும்பப் பெறப்படாமல் ஊழலுக்கு வழிவகுத்ததாகக் குற்றச்சாட்டுகள் எழுந்தன. ஆண்டுக்கு ரூ.3,600 கோடி அளவுக்கு இந்தக் கூடுதல் வசூல் மூலம் வருமானம் கிடைத்ததாகவும், இதில் பெரும் பகுதி “பார்ட்டி ஃபண்ட்” உள்ளிட்ட அலுவலர்களுக்குச் சென்றதாகவும் புகார்கள் இருந்தன.
இதையும் படிங்க: ஆண்டுக்கு 8,000 கோடி இழப்பு... தனியார் வசமாகிறதா டாஸ்மாக்?... பகீர் தகவலை சொன்ன அமைச்சர்...!
விஜய் ஆட்சி பொறுப்பேற்ற உடனேயே இந்த நடைமுறையை நிறுத்த மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் விக்னேஷ் உள்ளிட்டோர் உத்தரவுகளைப் பிறப்பித்தனர். டாஸ்மாக் ஊழியர்கள் மீது FIR பதிவு செய்யப்பட்டது, சஸ்பெண்ட் செய்யப்பட்ட சம்பவங்களும் நடைபெற்றன.
இதுவரை 200 டாஸ்மாக் ஊழியர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். கடந்த 20 நாட்களில் 200 டாஸ்மாக் ஊழியர்களை சஸ்பெண்ட் செய்துள்ளனர். பாட்டிலுக்கு கூடுதலாக பத்து ரூபாய் வசூலித்த சம்பவத்தின் எதிரொலியாக இந்த பணியிடை நீக்கம் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருக்கிறது.
இதையும் படிங்க: டாஸ்மாக் மது மீதான கட்சி நிதி அரசுக்கு மாற்றம்!! ஆண்டுக்கு ரூ.1,200கோடி கூடுதல் வருவாய்! முதல்வர் விஜய் அதிரடி!