தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் தமிழ்நாட்டின் முதலமைச்சராக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். விஜய் முதலமைச்சராக பதவியேற்ற சில நாட்களிலேயே கல்வி நிலையங்கள், பள்ளிக்கூடங்கள் மற்றும் மக்கள் கூடும் இடங்களில் வந்து 717 டாஸ்மார்க் மதுமான கடைகளை அதிரடியாக மூட வந்து உத்தரவிட்டிருந்தார். மேலும் கள்ளச்சந்தையில் மது விற்பனையைக் கண்காணிப்பது தொடர்பாகவும் அதிரடி உத்தரவுகளை பிறப்பித்துள்ளார்.
குறிப்பாக 21 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு மதுபானம் விற்க கூடாது. போதை பொருள் மற்றும் சட்ட விரோத மது விற்பனையை தன்னார்வ அமைப்புகள், ஆசிரியர்கள், பெற்றோர்கள், மகளிர் சுய உதவி குழுக்கள் உள்ளிட்டோருடைய உதவியுடன் ரகசிய தகவல் வலையமைப்பை உருவாக்கவும் உத்தரவு பிறப்பித்துள்ளார். கள்ளச்சாராயம் தயாரிப்பு, கடத்தல் மற்றும் போதை பொருள் சேமிப்பு தொடர்பாக கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் காவல்துறை, போதை பொருள் தடுப்பு பிரிவு, ரயில்வே போலீஸ் உள்ளிட்ட துறைகளுடன் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.
மேலும் சட்டத்திற்கு புறம்பாக டாஸ்மார்க் மதுபான கடைகளில் கூடுதல் விலைக்கு மதுபானங்கள் விற்றால் கடு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும். இதை கண்காணிக்காத அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று டாஸ்மார்க் நிர்வாகம் எச்சரிக்கை விடுத்திருக்கிறது. இந்த நிலையில் இதையெல்லாம் காற்றில் பறக்க விட்டுவிட்டு மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் கடை ஒன்றில், சட்டத்திற்கு புறம்பாக மதுபான பாட்டில்களுக்கு 10 ரூபாய் வசூலிக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதையும் படிங்க: சொல்லி கேட்கலன்னா இது தான் கதி... சாட்டையை சுழற்ற ஆரம்பித்த விஜய்... அதிகாரிகளுக்கு பறந்த அதிரடி உத்தரவு...!
மயிலாடுதுறை அருகே மூவலூர் கிராமத்தில் உள்ள 5772 என்ற எண் கொண்ட அரசு டாஸ்மாக் மதுபான கடையில சட்டத்திற்கு புறம்பாக பாட்டிலுக்கு பத்து ரூபாய் கூடுதலாக வாங்கியதை திருப்பி கேட்ட இளைஞர் ஒருவருடன் வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது. அப்போது வாக்குவாதத்தில் ஈடுபட்ட இளைஞரின் செயினை டாஸ்மாக்கி வேலை பார்த்த ஊழியர் ஒருவர் அறுத்ததாகவும் கூறப்படுகிறது.
இதனால் அங்குபதட்டமான சூழ ஏற்பட்டது. தொடர்ந்து அங்கு மதுவாங்க வந்த இளைஞர்கள் கடை கடையை முற்றுகையிட்டு, டாஸ்மாக் ஊழியர்களிடம் கடுமையான வாக்குவாதத்தை ஈடுபட்டனர். இதனால டாஸ்மார்க் கடை மூடப்பட்டது. அதனை தொடர்ந்து அங்கு இருந்தவர்கள் அந்த இளைஞர்கள் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர். அதனை தொடர்ந்து அரை மணி நேரத்திற்கு பிறகு மீண்டும் டாஸ்மாக் கடை திறக்கப்பட்டு மது விற்பனை தொடர்ந்து நடைபெற்று வந்தது. இச்சம்பவம் தொடர்பாக மயிலாடுதுறை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதேபோல கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு தரங்கம்பாடி தாலுக்கா ஆக்கூர் முக்கூடு பகுதியில் இருக்கிற டாட்மாக் மதுமான கடையில் சட்டத்துக்கு புறம்பாக பாட்டிலுக்கு பத்து ரூபா வசூலிக்கும் சம்பவம் நடைபெற்றது. அங்கும் வந்து இளைஞர்கள் தட்டிகேட்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி பெரும் வரப்பை ஏற்படுத்திருக்கிறது. தவெக தலைவராக இருந்த விஜய் பாட்டிலுக்கு பத்து ரூபாய் வசூலிப்பதாக பாட்டு பாடி, மக்களின் ஆதரவுடன் இன்று சி.எம். ஆன நிலையில், அவரது உத்தரவைக் கூட மதிக்காமல் டாஸ்மாக் ஊழியர்கள் பாட்டிலுக்கு 10 ரூபாய் வசூலிப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: ஓட்டு போட்டது நாங்க..! ஒயின் ஷாப்பையே எடுப்பீங்களா..? குடிமகன்கள் ஆவேசம்..!