அமெரிக்கா இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 50 சதவீத இறக்குமதி வரி விதிக்கும் முடிவை அமல்படுத்தியுள்ளது. இந்த நடவடிக்கை உலகளாவிய வர்த்தக உறவுகளிலும், இந்தியாவின் பொருளாதாரத்தில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த வரி உயர்வு, இந்தியாவின் ரஷ்யாவுடனான கச்சா எண்ணெய் மற்றும் ராணுவ உபகரணங்கள் வர்த்தகத்திற்கு அபராதமாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அறிவித்ததாகக் கூறப்படுகிறது.
இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களின் மதிப்பு ஆண்டுக்கு சுமார் 87.3 பில்லியன் டாலர்கள். இதில் கிட்டத்தட்ட பாதி பொருட்கள் இந்த 50 சதவீத வரிக்கு உட்படுத்தப்படுகின்றன. இந்த வரி உயர்வு, இந்தியாவின் ஜவுளி, நகைகள், ரத்தினக் கற்கள், கடல் உணவுகள், தோல் பொருட்கள், ஆட்டோமொபைல் உதிரி பாகங்கள், மரச்சாமான்கள் மற்றும் ரசாயனப் பொருட்கள் போன்ற துறைகளை கடுமையாக பாதிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக, தமிழ்நாட்டின் திருப்பூர் பகுதியைச் சேர்ந்த பின்னலாடை ஏற்றுமதியாளர்கள் பெரும் நெருக்கடியை எதிர்கொள்கின்றனர்.

இந்தியாவின் மொத்த ஆடை ஏற்றுமதியில் 30 சதவீதம் அமெரிக்காவுக்குச் செல்கிறது, இதில் திருப்பூரின் பங்களிப்பு 68 சதவீதமாகும். இந்த வரி உயர்வால், இந்தத் துறையில் வேலைவாய்ப்பு இழப்பு மற்றும் பணி நீக்கங்கள் ஏற்பட வாய்ப்புள்ளதாக பொருளாதார நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
இதையும் படிங்க: திமுக தலைவராக ஸ்டாலின் பொறுப்பேற்ற தினம் இன்று..! குவியும் கழக உடன்பிறப்புகளின் வாழ்த்துகள்..!
அமெரிக்காவின் இந்த 50 சதவீத வரிவிதிப்பு உயர்வால் தமிழ்நாட்டின் ஏற்றுமதி கடுமையாக பாதிக்கப்பட்ட இருப்பதாக முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். திருப்பூரில் ஏற்றுமதி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் 3000 கோடி வர்த்தக பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் முதல்வர் குறிப்பிட்டு உள்ளார். நமது தொழில்கள் தொழிலாளர்களை பாதுகாக்க நிவாரண கட்டமைப்பு சீர்திருத்தங்களை மத்திய அரசு வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
இதையும் படிங்க: கள்ளச்சாராயம் குடிச்சு செத்தா ரூ.10 லட்சம்! இறந்து போன அரசு மருத்துவர் கண்ணுக்கு தெரியலையா? விளாசிய சீமான்..!