இந்தியாவில் டீ மற்றும் காபி ஆகியவை வெறும் பானங்கள் மட்டுமல்ல., அவை காலைப் பொழுதைத் தொடங்குவதற்கும், மாலை நேரத்தில் உற்சாகம் ஊட்டுவதற்கும், சமூக உரையாடல்களுக்கு உயிர் கொடுப்பதற்கும் பயன்படும் கலாசார அடையாளங்கள். ஆனால், கடந்த சில ஆண்டுகளாக இந்த பானங்களின் விலை உயர்ந்து வருவது பொதுமக்களுக்கு, குறிப்பாக ஏழை மற்றும் நடுத்தர மக்களுக்கு பெரும் சவாலாக மாறியுள்ளது.
டீ, காபி விலையை உயர்த்தி டீ கடை வியாபாரிகள் சங்கம் அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. 3 ஆண்டுகளுக்குப் பிறகு உயரும் டீ, காபி விலை உயர்வதாக கூறப்பட்டு உள்ளது. சென்னையில் நாளை முதல் டீ, காபி விலை உயர்வு அமலாகிறது. ஒரு கிளாஸ் டீ ரூ.12ல் இருந்து ரூ.15 ஆகவும், காபி ரூ.15ல் இருந்து ரூ.20 ஆகவும் உயர்த்தப்படுகிறது.

பால் விலை, டீ, காபி தூள் விலை உயர்வு, போக்குவரத்துச் செலவு அதிகரிப்பால் இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது என டீ கடை வியாபாரிகள் சங்கம் தெரிவித்து உள்ளது. டீ மற்றும் காபி விலை உயர்வு பல தரப்பினரை பாதித்துள்ளது. முதலில், பொதுமக்கள், குறிப்பாக ஏழை மற்றும் நடுத்தர மக்கள், இந்த விலை உயர்வால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதையும் படிங்க: ஆக்ஸ்போர்ட் பல்கலை.யில் பெரியார் உருவப்படம்! MP என்.ஆர் இளங்கோ இல்ல திருமண விழாவில் பங்கேற்ற முதல்வர் அறிவிப்பு..!
டீ மற்றும் காபியின் விலை உயர்வு அன்றாட உழைப்பாளர்கள் மற்றும் குறைந்த வருமானம் உள்ளவர்கள் கவலை அடைந்துள்ளனர். ரயில் நிலையங்களில் விலை உயர்வு காரணமாக பயணிகளும் அதிருப்தி அடைந்தனர்.
இதையும் படிங்க: #BREAKING: TNPSC குரூப் 1 தேர்வு முடிவுகள் வெளியாகின… அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியீடு!