தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு பள்ளிக் கல்வித்துறை புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. மாணவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதையும் பள்ளிகளில் ஒழுங்கை மேம்படுத்துவதையும் முதன்மை நோக்கமாகக் கொண்டு இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. செங்கல்பட்டு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் கடந்த அக்டோபர் 22 அன்று வெளியிட்ட சுற்றறிக்கை தற்போது மாநிலம் முழுவதும் உள்ள அரசு மற்றும் அரசு உதவிபெறும் உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளுக்கும் முன்மாதிரியாக அமல்படுத்தப்பட உள்ளது.
இந்த உத்தரவின்படி, பள்ளி வேலை நேரத்தில் ஆசிரியர்கள் எவரும் பள்ளி வளாகத்தை விட்டு வெளியே செல்லக் கூடாது. இந்தத் தடை மதிய உணவு இடைவேளை நேரத்திற்கும் பொருந்தும். ஆசிரியர்கள் தங்களது சொந்தக் காரணங்களுக்காகவோ அல்லது வெளி வேலைகளுக்காகவோ பள்ளி வளாகத்தை விட்டுச் செல்லும்போது வகுப்பறைகளில் மாணவர்களைக் கண்காணிப்பதில் தொய்வு ஏற்படுவதாகப் புகார்கள் எழுந்திருந்தன.

குறிப்பாக மதிய உணவு இடைவேளையின் போது ஆசிரியர்கள் வெளியே செல்லும் சூழலில் மாணவர்கள் தங்களுக்குள் சண்டையிடுவதோ அல்லது விபத்துகளில் சிக்குவதோ போன்ற அசம்பாவிதங்கள் நடப்பதைத் தடுக்கவே இந்த வளாகத் தடை விதிக்கப்பட்டுள்ளது.மேலும், பள்ளி சூழலில் ஏதேனும் அசாதாரண நிகழ்வுகள் அல்லது பிரச்சினைகள் ஏற்பட்டால் தலைமை ஆசிரியர்கள் தன்னிச்சையாக எந்த முடிவையும் எடுக்கக் கூடாது.
இதையும் படிங்க: ரூ.100 கோடி முறைகேடு! அன்பில் மகேஷ் வழக்கில் பெருங்குடியில் அதிரடி சோதனை! ஷண்முக பிரியா வீட்டில் ரெய்டு!
அத்தகைய சூழ்நிலையில் உடனடியாக மாவட்டக் கல்வி அலுவலர் அல்லது முதன்மைக் கல்வி அலுவலருக்குத் தகவல் தெரிவித்து, மேலிடத்து ஆலோசனையைப் பெற்ற பிறகே அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். பள்ளிகளில் சாதிய மோதல்கள் அல்லது ஒழுங்கீனப் பிரச்சினைகள் ஏற்படும்போது தலைமை ஆசிரியர்கள் தாமாக எடுக்கும் சில முடிவுகள் சட்ட ஒழுங்கு சிக்கலாக மாறுவதைத் தவிர்க்கவும் இந்த அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: அரிசி விலையைக் கட்டுப்படுத்த அதிரடி... ஆந்திராவில் இருந்து வரப்போகும் நெல் மூட்டைகள்... அமைச்சர் செங்கோட்டையன் அதி முக்கிய தகவல்...!