திருச்சி, திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் கோயிலில் அகிலா என்ற யானை, 2011ஆம் ஆண்டு முதல் சேவையாற்றி வருகிறது. இந்த கோயிலில், காவிரி ஆற்றில் இருந்து யானை துதிக்கை மூலம் தண்ணீர் கொண்டு வந்து, சிவபெருமானை வணங்கியதாக வரலாற்றில் கூறப்படுகிறது. ஒவ்வொரு கால பூஜையிலும் கோயில் யானை அகிலா மூலம் புனிதநீர் எடுத்துவரப்பட்டு சிவபெருமானுக்கு அபிஷேகம் செய்யப்படுகிறது.

யானைகள் இயல்பாகவே தண்ணீரைக் கண்டால் குதூகலமாகி, தண்ணீரை உறிஞ்சி உடலில் விசிறியடித்துக் கொள்ளும். அந்த வகையில் ஜம்புகேஸ்வரர் கோயில் வளாகத்திற்குள் நாச்சியார் தோப்புப் பகுதியில் 20 அடி நீளம், 20 அடி அகலம், 6 அடி ஆழத்தில் சுற்றுச் சுவருடன் கூடிய குளியல் தொட்டி கட்டப்பட்டு உள்ளது.
இதையும் படிங்க: வஃக்பு திருத்த மசோதா: சர்ச்சைக்குரிய 5 பிரச்னைகள் என்ன? இஸ்லாமியர்கள் எதிர்ப்பது ஏன்..?

கோடை வெயிலில் இருந்து தற்காத்துக் கொள்ளவும், வெயிலை சமாளிக்கவும் ஏதுவாக கோயில் வளாகத்தில் யானைக்காக கட்டப்பட்ட நீச்சல் குளத்தில் மூழ்கி குளித்தும், தண்ணீர் பம்ப்பில் பாய்ந்து வரும் தண்ணீரை பிடித்து உடலில் பீய்ச்சி அடித்துக் கொண்டும், ஷவரில் உற்சாகமாக குளித்தும் உடலை குளிர்வித்துக் கொண்டது. யானை குளிப்பதைப் பக்தர்கள் பார்வையிட்டு மகிழ்ந்தனர்.
இதையும் படிங்க: கொளுத்தி எடுக்கும் கோடை வெயில்.. காட்டை விட்டு வெளியேறி மர நிழலில் அமர்ந்திருக்கும் புள்ளி மான்கள்.