TET தேர்வு ஆசிரியர்களின் கற்பித்தல் திறனையும், பாடத்திட்ட அறிவையும், குழந்தைகளின் வளர்ச்சி மற்றும் கல்வி முறைகள் குறித்த புரிதலையும் மதிப்பிடுகிறது. இந்தத் தேர்வு ஆசிரியர் பணியின் தரத்தை உயர்த்துவதற்கும், கல்வி முறையில் ஒரே மாதிரியான தரநிலைகளை உறுதி செய்வதற்கும் உருவாக்கப்பட்டது. இது மாணவர்களுக்கு தரமான கல்வியை வழங்குவதற்கு உதவுகிறது.
ஆசிரியர் தகுதித் தேர்வு (TET) என்பது இந்தியாவில் ஆசிரியர் பணியில் சேர விரும்புவோருக்கு அவசியமான ஒரு தகுதி மதிப்பீட்டுத் தேர்வாக அமைந்துள்ளது. ஆசிரியர் தகுதி தேர்வு தொடர்பாக தமிழ்நாடு, மகாராஷ்டிரா உள்ளிட்ட பல மாநிலங்கள் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், டெட் தேர்வு கட்டாயம் என்று உத்தரவிட்டுள்ளது.

ஐந்து ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றும் ஆசிரியர்கள் தொடர்ந்து பணியாற்ற தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஓய்வு பெறும் வயதை அடைய ஐந்து ஆண்டுகள் மட்டுமே உள்ள ஆசிரியர்கள் தகுதி தேர்வு எழுத தேவை இல்லை என்று கூறியுள்ளது. சிறுபான்மை நிறுவனத்தில் டெட் தேர்வை கட்டாயப்படுத்த முடியுமா என்பது குறித்து விசாரிக்க உயர் அமர்வுக்கு வழக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. சிறுபான்மை நிறுவனங்களில் டெட் கட்டாயப்படுத்தினால் உரிமை பாதிக்குமா என்பதை விசாரிக்க உயர் அமர்வுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: ராமர் பாலத்தை தேசிய சின்னமாக அறிவிக்கலாமா? மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ்
மேலும், ஆசிரியர் தகுதி தேர்வில் தகுதி பெறாதோர் வேலையை விட்டு வெளியேறலாம் அல்லது இறுதி சலுகைகளுடன் கட்டாய ஓய்வு பெறலாம் என்றும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: கோவில் நிதியை கல்விக்கு USE பண்ணா என்ன தப்பு? தமிழக அரசுக்கு எதிரான மனு தள்ளுபடி…