விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே அர்ச்சுனாபுரத்தில் அமைந்துள்ளது நல்லதங்காள் கோளல். தமிழக பெண்களின் கலாச்சாரத்திற்கும், அண்ணன் தங்கை உறவிற்கும் மிகச் சிறந்த எடுத்துக்காட்டாக விளங்கிய நல்லதங்காள், அவர் வாழ்ந்த 15-ம் நூற்றாண்டில் நாட்டில் நிலவிய கடும் பஞ்சம் காரணமாக பசியால் துடித்த தனது ஏழு பிள்ளைகளையும் கிணற்றில் வீசி கொன்றுவிட்டு தானும் அந்த கிணற்றில் விழுந்து தற்கொலை செய்து கொண்டார்.
அவர் தற்கொலை செய்து கொண்ட கிணறு அவர் தங்கிய இடம் ஆகியவை நினைவுச் சின்னமாகவும் கோவிலாகவும் எழுப்பப்பட்டு மக்களால் வழிபடப்பட்டு வருகிறது. அக்கோயிலில் நல்லதங்காள் பத்திரகாளியம்மன் வடிவில் எழுந்தருளி அருள் பாலித்து வருகிறார்.தமிழகம் முழுவதிலும் இருந்தும் குழந்தை வரம் வேண்டி ஏராளமானோர் இங்கு வந்து நேர்த்திக்கடன் செலுத்தி வழிபட்டு வருகின்றனர்.
இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இக்கோவிலில் கடந்த ஜனவரி 26 ஆம் தேதி கோயில் கதவுகள் உடைக்கப்பட்டு நல்லதங்காள் சிலை உடைக்கப்பட்டதை கண்டு பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர் .இந்த சம்பவத்தில் 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
இதையும் படிங்க: என்ன நடக்கும்னு உங்களுக்கே தெரியும்!! இந்தியாவுக்கு நேட்டோ வார்னிங்! புடினால் வந்த வினை!!
இந்நிலையில் சிலை உடைக்கப்பட்ட நல்லதங்காள் கோயிலில் அர்ச்சுனாபுரம் கிராம மக்கள் சார்பாக ஏற்கனவே பாலாலயம் நடத்தப்பட்ட நிலையில் தற்போது இந்து சமய அறநிலைத்துறை சார்பாக இன்று பாலாலயம் நடத்த எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் நூற்றுக்கணக்கானோர் கோவில் முன்பு அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.மேலும் கோவிலுக்குள் பொதுமக்கள் செல்லாமல் போலீசார் தடுத்ததால் போலீசாருக்கும் காவல்துறையையும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
தொடர்ந்து கிராம மக்கள் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.ஏற்கனவே பாலாலயம் நடத்த எதிர்ப்பு தெரிவித்து கடந்த 7 தேதி கோவில் முன்பு கிராம மக்கள் போராட்டம் நடத்தியது குறிப்பிடத்தக்கது.
நல்லதங்காள் கோவில் சிலை உடைக்கப்பட்ட நிலையில் புதிதாக அர்ச்சுனாபுரம் கிராம மக்கள் சார்பாக செய்யப்பட்டுள்ள சிலையை வைத்து கும்பாபிஷேகம் நடத்த அனுமதிக்க வேண்டும் எனவும் கிராம மக்கள் சார்பாக கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அசம்பாவிதங்கள் ஏதும் ஏற்படாமல் இருக்க ஏ டி எஸ் பி அசோகன் ஸ்ரீவில்லிபுத்தூர் டிஎஸ்பி ராஜா வத்திராயிருப்பு இன்ஸ்பெக்டர் சந்திரன் மற்றும் 50க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இதையும் படிங்க: நண்பா.. நண்பீஸ் இனி வரலாறு பேசும்..! தவெக 2வது மாநாடு அறிவிப்பை பகிர்ந்த விஜய்..!