மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் என்ற பெயரில் எடப்பாடி பழனிச்சாமி தனது தேர்தல் சுற்றுப்பயணத்தை நடத்தி வருகிறார். தனது சுற்றுப்பயணத்தின் போது பேசிய எடப்பாடி பழனிச்சாமி, செல்வப் பெருந்தகை பல கட்சிகளில் இருந்தவர் என்றும் பல கட்சிகளுக்கு போய் வந்துவிட்டார். எனவும் கூறினார். காங்கிரஸ் கட்சியில் உள்ள மற்ற தலைவர்கள் ஆட்சியில் பங்கு கேட்டு பேசி வருவதாகவும் ஆனால் ஆட்சியில் பங்கு கேட்க ராகுல் காந்தி சொல்லவில்லை என செல்வப் பெருந்தகை கூறுவதாகவும் கூறினார்.
உண்மையில் ஒரு காங்கிரஸ் தொண்டனாக இருந்திருந்தால் அந்த எண்ணம் இவருக்கு வந்திருக்குமா என்றும் திமுகவை செல்வப் பெருந்தகை தாங்கி பிடிப்பதாகவும் காங்கிரஸ் கட்சியை வளர்க்க பார்க்கவில்லை எனவும் குற்றம் சாட்டி இருந்தார். செல்வப் பெருந்தகை காங்கிரசுக்கு விசுவாசமாக இல்லை என்றும் திமுகவுக்கு தான் விசுவாசமாக இருக்கிறார் எனவும் தெரிவித்தார்.

திமுக கூட்டணியில் பிளவு வந்துவிட்டதாகவும் ஸ்டாலின், உதயநிதி ஆகியோர் திமுக கூட்டணி நிலையாக உள்ளது என்று கூறுவதாகவும் அதிமுக அடிக்கடி கூட்டணி மாறுவதாகவும் செல்கிறார்கள் என்றும் தெரிவித்திருந்தார். அ.தி.மு.க.வை பொறுத்தவரை எப்போதும் கூட்டணியை நம்பி இருந்தது இல்லை என்றும் ஆனால் தி.மு.க எப்போதும். கூட்டணியை நம்பி தான் இருக்கிறது எனவும் கூறினார்.
இதையும் படிங்க: தமிழக அரசியலில் தலைகீழ் திருப்பம்... ஓபிஎஸ், டிடிவி, செங்கோட்டையன் ரகசிய சந்திப்பு? - இபிஎஸ் தலையில் இறங்கியது இடி...!
தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவரை தி.மு.க. தான் நியமிக்கிறது என்றும் தி.மு.க. யாரை பரிந்துரை செய்கிறதோ அவரை தான் காங்கிரஸ் மேலிடம் தமிழக காங்கிரஸ் தலைவராக நியமிக்கிறது எனவும் கண்ணுக்கு தெரியாத காற்றில் கூட ஊழல் செய்யும் கட்சி தி.மு.க என்றும் கூறி இருந்தார். எடப்பாடி பழனிச்சாமியின் இந்த பேச்சுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது.
முதலமைச்சர் என்ற உயர்ந்த பொறுப்பில் இருந்த எடப்பாடி பழனிசாமி தனிநபர் தாக்குதல் செய்வது அதிர்ச்சி அளிக்கிறது என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் தெரிவித்தார். இது அவரது அரசியலுக்கு உகந்ததல்ல என்றும் கூறினார். செல்வப்பெருந்தகை குறித்த இபிஸ் விமர்சனத்திற்கு திருமாவளவன் இவ்வாறு பதிலடி கொடுத்தார்.
இதையும் படிங்க: ஊழலுக்கும், லஞ்சத்துக்கும் தான் திமுக ரோல் மாடல்... எடப்பாடி பழனிச்சாமி சாடல்...!