கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் விடுதலை சிறுத்தைள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் நீட் தேர்வு கெடுபிடிகள் குறித்து காட்டமாக விமர்சித்தார். நீட் தேர்வில் தாலியை வெளியில் வைத்துவிட்டு வரவேண்டும் என்று சொல்வது காட்டுமிராண்டித்தனம். வரைமுறை இல்லாதது. பட்டன்கள் அதிகமாக இருந்தால் அனுமதி கிடையாதா?
பரிட்சை எழுதுபவர்கள் காப்பி அடிக்காமல் இருக்க வேண்டும் என்று தான் பார்க்க வேண்டுமே தவிர தாலியை கழற்றி வைத்துவிட்டு வர சொல்வது நாகரீகம் இல்லாதது. இந்த செயல்களை விடுதலை சிறுத்தைகள் கட்சி கடுமையாக கண்டிக்கின்றது. இதில் தமிழக அரசுக்கும் பங்கு உள்ளது. தேர்வு எழுதுபவர்கள் சுதந்திரமாக எழுத வேண்டும் இதே போல் நடப்பது மிகவும் நாகரீகம் இல்லாதது என்றார்.

அதிமுக பாஜக கூட்டணி குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த திருமாவளவன், அண்ணா திமுக - பாஜக கூட்டணி சென்ற சட்டமன்றத் தேர்தலில் இருந்தது தான். சென்ற முறை முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் நாங்கள் பாரதிய ஜனதா கட்சியுடன் கூட்டணி வைத்ததால் தான் நான் தோற்றேன் என்று செய்தியாளர்கள் முன்பு பதிவு செய்தார். அதுவும் எனது தொகுதியில் முடிசூடா மன்னனாக இருந்த நான் பாரதிய ஜனதா கூட்டணியால் நான் தோற்றேன் என்றார். இப்பொழுதும் அப்படித்தான். அண்ணா திமுகவும் பாரதிய ஜனதாவும் ஆட்சியைப் பிடிக்க முடியாது. ஆனால் பொதுமக்களிடம் ஒரு மாய வலையை விரித்து வருகின்றனர் என்றார்.
இதையும் படிங்க: பாகிஸ்தான் கூட போர் வேணுமா? - இந்தியாவை பின்வாங்கச் சொல்லும் திருமா!

வருகின்ற சட்டமன்ற தேர்தலில் அதிக சீட்டு கேட்பீர்களா? என்று கேட்டதற்கு நான் திமுக கூட்டணியில் தான் உள்ளேன். இதில் எந்த மாற்றமும் கிடையாது. நேரம் வரும் பொழுது செய்தியாளர்களிடம் சொல்கிறேன் என்றார். சட்டம் ஒழுங்கு கெட்டுவிட்டது என்று அண்ணாமலை கூறுகிறாரே? என்று கேட்டதற்கு பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் அண்ணாமலை கிடையாது. நயினார் நாகேந்திரன் தான். இவர் ஏதோ இப்பொழுது தலைவர் போல் கூறிக் கொண்டிருக்கின்றார். இன்னும் அந்த நிலைப்பிலே உள்ளார் போல என்றார்.

பாமக மாநாட்டில் கலந்து கொள்கிறீர்களா என்ற கேள்விக்கு, ஒரு நண்பர் என்னிடம் நட்பு அடிப்படையில் அந்த நோட்டீசை தந்தார். அதை நான் வாங்கிக் கொண்டேன். மற்றபடி முறையான அழைப்பு எனக்கு கிடையாது. நான் அந்த நோட்டீஸிற்கு வாங்கிக் கொண்டு வாழ்த்துக்கள் தெரிவித்து விட்டேன் என்று கூறினார்.

மேலும் மோதலை ஏற்படுத்தும் விதமாக உண்மைக்கு புறம்பான தகவலை கூறிய மதுரை ஆதீனம் மீது நடவடிக்கை தேவை என விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். விபத்து தொடர்பான மதுரை ஆதீனதின் குற்றச்சாட்டை சாதாரணமாக கடந்து போய்விட முடியாது. மதுரை ஆதீனம் போன்ற மடாதிபதிகள் மிகுந்த பொறுப்புணர்வோடு நடந்து கொள்ள வேண்டும்; மதுரை ஆதீனத்தின் பேச்சு இரு மதங்களுக்கு இடையே பகையை உண்டாக்கும் விதமாக உள்ளது என்றும் கூறினார்.
இதையும் படிங்க: பாக்.-க்கு ஆதரவா பேசலாமா? அவங்கள கண்காணிக்கணும்! 3 பேரை கடுமையாக சாடும் எச்.ராஜா..!