திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே கரைப்புதூரில் தனியாருக்குச் சொந்தான சாய ஆலை இயங்கி வருகிறது. இந்த ஆலையில் 70க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் திங்கள்கிழமை வேலை செய்து கொண்டிருந்தனர். அப்போது சுமார் 7 அடி ஆழமுள்ள சாயக்கழிவு நீர்த்தொட்டியை சுத்தம் செய்யும் பணியில் 4 தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர். இதனிடையே, திடீரென விஷவாயு தாக்கியதில் 4 தொழிலாளர்களும் மயக்கம் அடைந்தனர். இதில் 3 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து சென்ற போலீசார் இறந்தவர்களின் உடலை கைப்பற்றியதோடு சாய ஆலையின் உரிமையாளர் நவீன் மற்றும் சின்னசாமி ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து விசாரித்து வருகின்றனர்.