திருவள்ளூர் மாவட்டம் களாம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த தனுஷ் தேனியைச் சேர்ந்த பெண் ஒருவரை காதலித்து பதிவு திருமணம் செய்து கொண்டார். இதனால் ஆத்திரமடைந்த பெண் வீட்டார், தனுஷின் சகோதரரான 17 வயது சிறுவனை காரில் கடத்திச் சென்றுள்ளார். இது தொடர்பாக போலீசில் புகார் அளிக்கப்பட்டு உள்ளது.
இந்த வழக்கில், தேனி மாவட்டத்தைச் சேர்ந்த விஜயஸ்ரீயின் தந்தை வனராஜா, உறவினர்களான மணிகண்டன், கணேசன், பணி நீக்கம் செய்யப்பட்ட பெண் காவலர் மகேஸ்வரி, மற்றும் பூந்தமல்லி துத்தம்பாக்கத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் சரத்குமார் ஆகிய ஐந்து பேர் கைது செய்யப்பட்டு, புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். சிபிசிஐடி இந்த வழக்கை தொடர்ந்து விசாரித்து வருகிறது, மேலும் ஏடிஜிபி ஜெயராமிடம் காஞ்சிபுரம் சிபிசிஐடி அலுவலகத்தில் நான்கு மணி நேர விசாரணை நடத்தப்பட்டு, அவரது வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, அரசு இயந்திரம் தவறாக பயன்படுத்தப்பட்டதாக உயர்நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்தது. அப்போது, நாடு போலீஸ் ராஜ்ஜியத்திற்கு செல்கிறதோ என சென்னை உயர்நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்தது. அரசு இயந்திரம் தவறாக பயன்படுத்தப்பட்டுள்ளதற்கு திருவள்ளூர் சிறுவன் கடத்தல் வழக்கு உதாரணம் என கூறிய நீதிமன்றம், வழக்கு சிபிசிஐடி-க்கு மாற்றப்பட்டுள்ள போதும் விசாரணையில் முன்னேற்றம் இல்லை என தெரிவித்தது. மேலும், சிறுவனை கடத்திய வழக்கில் கைது செய்யப்பட்ட மூவரின் ஜாமின் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.
இதையும் படிங்க: ரிதன்யா தற்கொலை வழக்கு..! காவல்துறை பதில் அளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு..!
மேலும், திருவள்ளூர் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் சிறுவன் கடத்தல் உள்ளிட்ட வழக்குகள் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி வேல்முருகன் ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின் போது, காவல்துறையின் பணி தாமதம் மற்றும் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குகள் குறித்து ஆலோசனைகள் வழங்கப்பட்டன.
இதையும் படிங்க: எந்த பிரச்சனையும் இல்லை! சீமானுக்கு பாஸ்போர்ட் வழங்குங்கள்! சென்னை உயர்நீதிமன்றம் ஆணை..!