திருச்செந்தூர் தமிழ் கடவுள் ஆன முருகப் பெருமான் ஆறுபடை வீடு இரண்டாம் படை வீடான சுப்பிரமணிய சுவாமி கோவிலில் தெய்வானை என்ற யானை பராமரிக்கப்பட்டு வருகிறது. 26 வயது கொண்ட இந்த தெய்வானை யானையை பராமரிப்பதற்காக கோவிலுக்கு பின்புறம் ஒரு குடில் அமைக்கப்பட்டுள்ளது. தினம்தோறும் நடைபயிற்சி கோவிலுக்கு வருகை தரும் பக்தர்களுக்கு ஆசீர்வாதம் என எப்போதும் உற்சாகமாக இருக்கும் தெய்வானை யானைக்கு கடந்த சில வருடங்களுக்கு முன்பு சரவண பொய்கை அமைந்துள்ள இடத்தில் நீச்சல் குளம் அமைக்கப்பட்டது.
இந்த நீச்சல் குளத்தில் தினம்தோறும் உற்சாக குளியல் போட்டு வரும் யானை தற்போது கோவிலில் பெருந்திட்ட வளாகப் பணிகள் நடந்து வருவதால் கோவிலுக்கு பின்புறம் யானைக்கு அமைக்கப்பட்டுள்ள குடில் பகுதியிலேயே நீராடி வருகிறது. இந்நிலையில் யானையை பராமரிப்பதற்காக சுமார் 10 லட்சம் மதிப்பில் தனிநபர் ஒருவர் உபயமாக குடில் ஒன்றை பிரத்யேகமாக கட்டி கொடுத்துள்ளார்.
சரவண பொய்கை வளாகத்திலேயே இந்த பிரமாண்டமான குடில் அமைக்கப்பட்டுள்ளது. சுமார் 30 அடி உயரத்திற்கு அமைக்கப்பட்டுள்ள இந்த யானை தங்கும் இடம் கீழே சுவர் கட்டப்பட்டுள்ளது. அதற்கு மேல் யானைக்கு வெளிச்சம் வர வேண்டும் என்பதற்காக இரும்பு வலையால் சுற்றி பொருத்தப்பட்டுள்ளது. அதற்கு மேல் தரத்தால் முழுமையாக மூடப்பட்டு அதற்கு மேல் பப் ஷீட் எனப்படும் நவீன ஷீட் போடப்பட்டுள்ளது. இந்த பப் ஷீட் என்பது இரண்டு தகரத்திற்கு இடையே ஸ்பான்ஜ் வைத்து தயாரிக்கப்படுவது. இதனால் வெயிலின் சூடு குடிலுக்குள் இறங்காது. இதன் காரணமாக குடில் எப்போதும் குழுமையாகவே இருக்கும்.
இதையும் படிங்க: இதுக்கு தான் உங்களுக்கு ஓட்டு போட்டோமா? - காரை முற்றுகையிட்ட பொதுமக்கள் - எம்.எல்.ஏ. செய்த காரியம்...!
இதனால் இந்த குடிலுக்குள் இருக்கும் தெய்வானை யானை எப்போதும் காற்றோட்டத்தில் இருக்கும். அதுமட்டுமல்லாமல் குடிலுக்குள் யானைக்கு இரண்டு மின் விசிறிகள் பொருத்தப்பட்டுள்ளது. மேலும் குடில் பகுதியில் வாட்டர் டேங்க், குடிலுக்குள் யானை நீர் அருந்த பிரத்யேக தொட்டி அமைக்கப்பட்டுள்ளது.
அதுமட்டுமல்லாமல் யானை பாகன் ஓய்வெடுப்பதற்கும் இதே போல் தனியாக சிறிய அளவிலாக குடில் இதே வடிவில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த குடிலை சுமார் 10 லட்சம் மதிப்பீட்டில் கோயம்புத்தூர் துடியலூர் பகுதியைச் சேர்ந்த ந காளிச்சாமி ஜெயந்தி பொது தொண்டு அறக்கட்டளையைச் சேர்ந்தவர்கள் உபயமாக செய்து கொடுத்துள்ளார்கள்.
விரைவில் கோவில் யானை தெய்வானை இந்த சரவண பொய்கை வளாகத்தில் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள குடிலுக்கு வர இருக்கிறது.
இதையும் படிங்க: சென்னை மக்களே ரெடியா.. நாளை இங்கெல்லாம் நடக்கிறது "உங்களுடன் ஸ்டாலின்" முகாம்..!!