சுப்பிரமணிய சுவாமி கோவில் உண்டியலில் நூதன முறையில் பணம் திருடிய கோவில் அர்ச்சகர் உட்பட இரண்டு பேரை காவல்துறையினர் கைது செய்தனர். அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாக இருக்கக்கூடிய திருச்செந்தூர் முருகன் கோவில் சிறந்த பரிகார ஸ்தலமாக விளங்கி வருவதால் நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். கோவிலுக்கு வரும் பக்தர்கள் காணிக்கை செலுத்த கோவில் சண்முகாச மண்டபம், உள் பிரகாரம், மூலவர் எதிரே செப்புக்கு கொடி மர அருகே உட்பட பல இடங்களில் உண்டியல்கள் வைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் கோவில் மூலவர் எதிரே வைக்கப்பட்ட நிரந்தர உண்டியலில் உண்டியல் காணிக்கை எண்ணுவதற்கு எடுக்கும் போது வழக்கத்தை விட பணம் குறைவாக இருந்ததாக தெரியவந்துள்ளது. இதனால் கண்காணிப்பு கேமராவில் பதிவு செய்யப்பட்ட காட்சிகளை பார்த்தபோது திருச்செந்தூர் கோவில் அர்ச்சகர் முருகன் என்ற முத்தன் என்பவர் மூலவர் எதிரே உள்ள உண்டியலில் துணி மற்றும் காகிதத்தை உண்டியல் வாயில் வைத்து நூதன முறையில் பணத்தை தொடர்ந்து எடுத்து வந்தது தெரிய வந்தது. அதனைத் தொடர்ந்து அனைத்து உண்டியல் அருகிலும் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்த போது கோவில் செப்பு கொடிமரம் அருகே உள்ள உண்டியலில் பக்தர் ஒருவர் இதுபோல பணத்தை திருடியது தெரியவந்தது.

இதுதொடர்பாக கோவில் நிர்வாகம் சார்பில் கோவில் காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதனையடுத்து சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் கோவில் உண்டியலில் பணம் திருடிய அர்ச்சகர் முருகன் (எ) முத்தன் மற்றும் பாண்டிச்சேரி அரியாங்குப்பத்தைச் சேர்ந்த ராமகிருஷ்ணன் இருவரையும் கைது செய்து விசாணை நடத்தியதில் உண்டியலிலிருந்து சுமார் 10,000 ரூபாய் வரை திருடியது தெரிய வந்தது.
இதையும் படிங்க: அட பாவிங்களா.! "கோபுர கலசங்கள் திருட்டு"..! வலைவீசி தேடிவரும் போலீஸ்..!!
இந்த நிலையில் கோவில் உண்டியலில் பணம் திருடிய வழக்கில் அர்ச்சகர் முருகன் மற்றும் பாண்டிச்சேரியை சேர்ந்த திருமுருகன் ஆகிய இருவரையும் கைது செய்த போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். கோவிலில் நூதன முறையில் உண்டியலில் பணம் திருடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: நெல்லையில் பூட்டையே உடைக்காமல் மாயமான 30 சவரன் நகைகள்... போலீசுக்கு வந்த ஒரே ஒரு சந்தேகம்... அம்பலமான அதிர்ச்சி கதை...!